பச்சோந்தியும் வேண்டாம், நாயும் வேண்டாம்: விருதை தூக்கி எறிந்த லோஸ்லியா!

0
69

நேற்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த வீட்டில் யாரும் மனிதனாகவே இருக்க கூடாது என்று கவின், சாண்டி இருவரும் பேசிக்கொண்டனர்.

நேற்றைய பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கவின், தர்ஷன், முகென், சாண்டி, லோஸ்லியா ஆகியோர் சிவப்பு நிற டீசர்ட் அணிந்திருந்தனர். மேலும், தர்ஷன், கவின் இருவரும் முன்தினம் நடந்தஷெரின் விவகாரம் பற்றி பேசினர். இப்போது என்னை பார்த்தால் சின்ன பையன் என்று தான் சொல்லுவாங்க. யாரும் இனிமேல் என்னிடம் சண்டை போடமாட்டாங்கள் என்றார் கவின். மேலும், அன்பு, மன்னிப்பு, நன்றி, நண்பர்கள், காதல், உணர்ச்சிவசப்படுதல் ஆகியவை இருக்கக் கூடாது என்று கவின் கூற, மொத்தத்தில் மனிதாகவே இருக்கக் கூடாது என்றார் சாண்டி.

தொடர்ந்து தர்ஷன், ஷெரின் இருவரும் தங்களது தொடர்பு குறித்து விவாதித்தனர். மற்றவர்கள் பேசியதற்கு ஏன் இப்படி அழுதுக்கொண்டே இருக்கிற. இது ஒன்றும் அப்படியொரு விஷயம் இல்லை. உனக்கும், எனக்கும் இதைப் பற்றி நன்கு தெரியும் என்று தர்ஷன் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வாரத்திற்கான லக்‌ஷூரி பட்ஜெட் டாஸ்க்கான மொத்த மதிப்பெண்களும் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. முந்திக்கோ பின்னிக்கோ டாஸ்க்கை சிறப்பாக செய்து முடித்த வனிதா, தர்ஷன், சேரன், ஷெரின் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதன் பிறகு ஷாப்பிங் முடியவும், வனிதா, சேரன், மோகன் வைத்யா ஆகியோர் லாஸ்லியாவைப் பற்றியும், சேரன், தர்ஷன் மற்ற போட்டியாளர்கள் பற்றியும் பேசிக்கொண்டனர். இதையடுத்து, சாண்டி, அபிராமி ஆகியோர் யோகா செய்தனர்.

கேமரா முன்பு போஸ் கொடுப்பது எப்படி என்று அபிராமி மற்ற போட்டியாளர்களுக்கு கற்றுக்கொடுத்தார். மற்ற போட்டியாளர்களை நகைச்சுவையாக கிண்டலடிக்கும் வகையில், அந்த போஸ் இருந்துள்ளது. இந்த வீட்டில் ஒவ்வொருவரும் சூப்பராக நடிக்கிறார் என்று மோகன் வைத்யா கூற, ஷெரின், சாக்‌ஷி, முகென் ஆகியோர் அதனை கேட்டுக்கொண்டிருந்தனர். இங்கு இருக்கும் போது ஒருவரை கிண்டலடிப்பது வேறு, வெளியில் சென்ற பிறகு கிண்டலடிப்பது வேறு என்றார் மோகன் வைத்யா.

முந்திக்கோ, பின்னிக்கோ டாஸ்க்கில் வெற்றி பெற்ற அணி, சிறப்பாக செய்தது யார் என்றும் தெரிவிக்க வேண்டும். இதில், சேரன், தர்ஷன் ஆகியோர் சிறப்பாக செய்ததாக தெரிவித்தனர். இதே போன்று இந்த வாரம் முழுவதும் சிறப்பாக செய்தவர்களில் லோஸ்லியா தேர்வு செய்யப்பட்டார். ஆனால், தோல்வியடைந்த அணியில், சரிவராத செய்யாதவர்களில் கவின் தேர்வு செய்யப்பட்டார். மேலும், கவின் நேரடியாக இந்த வாரம் வெளியேறுவதற்காக நாமினேட் செய்யப்பட்டார்.

விருது வழங்கும் விழா:

சிறப்பு விருந்தினராக வந்துள்ள அபிராமி, மோகன் வைத்யா மற்றும் சாக்‌ஷி ஆகியோர் போட்டியாளர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப அவார்டு வழங்க வேண்டும்.

பச்சோந்தி போன்று போலியானவர்:

இந்த வீட்டில் பச்சோந்தி போன்று போலியானவர் விருது லோஸ்லியாவிற்கு வழங்கப்பட்டது. இதனை தூக்கி எறிந்த லோஸ்லியாவை, மோகன் வைத்யா கடுமையாக கண்டித்தார். நீ, எங்களையும், பிக் பாஸையும் அவமதிக்கிறாய் என்று மோகன் வைத்யா தெரிவித்துள்ளார். இதையடுத்து, எனக்கு விருது கொடுக்க விருப்பமில்லை என்று சாக்‌ஷி தெரிவிக்க, லோஸ்லியா, சாக்‌ஷி இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது.

தனது மகளை பச்சோந்தி என்று அழைத்த விருந்தினர்களை சேரன் கடுமையாக கண்டித்தார். அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், விருந்தினர்கள் கொடுத்த காரணம் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் அமைந்துள்ளது. காரணத்திற்கும், பச்சோந்திக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை.

நரி விருது:

இந்த விருது சாண்டிக்கு வழங்கப்பட்டது.

மின்மினிப்பூச்சி:

ஷெரினுக்கு மின்மினிப்பூச்சிக்கான விருது வழங்கப்பட்டது. அனைவரிடமும் சரிசமமான உறவு வைத்துக்கொண்டிருப்பார்.

கொசு: வனிதா

கொசுவைப் போன்று இம்சை கொடுப்பவர் வனிதா. எதை வேண்டுமானாலும், இந்த உலகத்திலும், பிக் பாஸ் வீட்டிலும் அழிக்கலாம். ஆனால், கொசுவை மட்டும் அழிக்கவே முடியாது.

கிளி: முகென்

யார் என்ன சொன்னாலும், அதனை அப்படியே ஏற்றுக்கொள்வார். அதற்காக முகெனுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

கழுகு: தர்ஷன்

கூர்மையான நோக்கம் கொண்டவர் தர்ஷன். கழுகு எனது பள்ளியில் சின்னம். அது எனக்கு கிடைத்தது பெருமையாக இருக்கிறது.

தவளை: கவின்

தனது வாயால் கெடுபவர் கவின். அதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

சேரன்: யானை

எல்லாவற்றிலும் வலிமையாக இருக்கக்கூடியவர் சேரன். அதற்காக யானை விருது சேரனுக்கு வழங்கப்பட்டது.

கழுதைப்புலி

கோணலான புத்தி கொண்டவர் வனிதா. அதற்கான வனிதாவிற்கு இந்த விருது தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அவர் ஏற்கவில்லை.

லோஸ்லியா- நாய்

நாயைப் போன்று நன்றி கொண்டவர் லோஸ்லியா. அதற்காக அவருக்கு அந்த விருது வழங்கப்பட்டது. இரண்டு வகையான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனால், பச்சோந்தி விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.

பசு: வனிதா

அனைவரிடமும் அரவணைப்பதில், வனிதாவைப் போன்று யாருமில்லை. ஆதலால், அவருக்கு பசு விருது வழங்கப்பட்டது.

அட்டை:

அடுத்தவரை சார்ந்து வாழ்பவர். அனைத்து போட்டியாளர்களுக்கும் பொதுவாகவே இந்த அட்டை விருது வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here