நாள் ஒன்றிற்கு 33GB டேட்டா; அடித்து நொறுக்கும் BSNL; ஜியோவிற்கு நேரடி சவால்!

0
166

இந்த புதிய திட்டத்தின் கீழ் ஜியோவை மட்டுமின்றி ஏர்டெல் நிறுவனத்தின் திட்டங்களையும் விட்டுவைக்கவில்லை. அப்படி என்ன திட்டம்? அதன் விலை என்ன? இதர நன்மைகள் என்னென்ன?

அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் சேவையின் கீழ் அதன் புதிய ரூ.1,999 திட்டத்தை சேர்த்துள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ ஃபைபர் திட்டங்கள் அறிவிகப்பட்ட பின்னரே, பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் இந்த புதிய ரூ.1,999 பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டம் ஏற்கனவே இருக்கும் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களின் பட்டியலில் – அதாவது ரூ.849, ரூ.1,277, ரூ.2,499, ரூ.4,499, ரூ.5,999, ரூ.9,999 மற்றும் ரூ.16,999 ஆகியவற்றுடன் – இணைந்துள்ளது.

ஏர்டெல் மற்றும் ஜியோவிற்கு நேரடி சவால்!

பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் இந்த புதிய ரூ.1,999 பிராட்பேண்ட் திட்டமானது ஆக்ட் ஃபைபர்நெட், ஏர்டெல் வி-ஃபைபர் ஆகியவற்றிலிருந்து ரூ.1,999 திட்டங்களையும், ஜியோ ஃபைபரிடமிருந்து கிடைக்கும் ரூ.2,499 திட்டத்தையும் நேரடியாக எதிர்க்கிறது.

டேட்டா நன்மைகள்!

இந்த திட்டம் 33 ஜிபி அளவிலான தினசரி டேட்டா, அதாவது நாள் ஒன்றிற்கு 33ஜிபி அளவிலான டேட்டாவை ஒருவருக்கு கொடுக்கும். இதன் 33 ஜிபி அளவிலான டேட்டாவானது 100 எம்.பி.பி.எஸ் வேகம் வரை வழங்கும் என்று பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தி உள்ளது. வரம்பு முடிந்த பின்னரே இந்த வேகமானது 4 எம்.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும்.

பிஎஸ்என்எல் இந்த திட்டத்தை ஒரு வரம்பற்ற டேட்டா திட்டமாக சந்தைப்படுத்துகிறது என்றாலும் கூட மற்ற பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களைப் போலவே தினசரி 33 ஜிபி தரவு என்கிற வரம்பனை இது கொண்டுள்ளது. தெரியாதவர்களுக்கு, பிஎஸ்என்எல் இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களை திருத்தி தினசரி தரவு திட்டங்களாக மாற்றியது.

அழைப்பு நன்மைகள்!

டேட்டா நன்மைகளை தவிர, இந்த ரூ.1,999 பாரத் ஃபைபர் திட்டமானது பயனர்களுக்கு நிறுவனத்தின் லேண்ட்லைன் சேவையின் மூலம் நாட்டின் எந்தவொரு நெட்வொர்க்குக்கும் குரல் அழைப்புகளை இலவசமாக மேற்கொள்ள அனுமதிக்கிறது.

பிஎஸ்என்எல்-ன் பெஸ்ட் பிளான்!

சந்தையில் தற்போது நிலவும் சூழலை வைத்து பார்த்தல், இது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ‘பெஸ்ட்’ திட்டமாக தெரிகிறது, ஆனால் இணைய வேகம் தான் சற்று குறைவானதாக தெரிகிறது. குறைந்தபட்சம், அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த பொதுத்துறை நிறுவனம் 250 எம்.பி.பி.எஸ் அளவிலான வேகத்தையாவது வழங்க வேண்டும்.

வாய்ப்பில்லை ராஜா! வாய்ப்பே இல்லை!

ஆனாலும் கூட, தற்போது அது சாத்தியமில்லாத ஒரு வேகம் ஆகும். ஏனெனில் பிஎஸ்என்எல்-ன் பிரீமியம் பிராட்பேண்ட் திட்டமான ரூ.16,999 திட்டத்தின் அதிகபட்ச வேகமே 100 எம்.பி.பி.எஸ் தான்!

பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட்டின் மற்ற திட்டங்கள்!

ரூ .1,999 பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், பிஎஸ்என்எல் இப்போது மொத்தம் எட்டு பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களை 100 எம்.பி.பி.எஸ் வரையிலான வேகத்தின் கீழ் வழங்குகிறது.

ரூ.849-ன் நன்மைகள்:

அடிப்படை பிராட்பேண்ட் திட்டமான ரூ.849 ஆனது 600 ஜிபி வரையிலான டேட்டாவை 50 எம்.பி.பி.எஸ் வேகத்தின் கீழ் வழங்குகிறது, இணைய வரம்பு முடிந்த பின்னர் இணைய வேகமானது 2 எம்.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும்.

ரூ.1,277-ன் நன்மைகள்:

இந்த ரூ.1,277 பாரத் ஃபைபர் திட்டமானது ஒரு பயனருக்கு 750 ஜிபி அளவிலான டேட்டாவை 100 எம்.பி.பி.எஸ் வேகத்தின் கீழ் வழங்கும். டேட்டா வரம்பு முடிந்த பின்னர் இணைய வேகமானது 2 எம்.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும்.

ரூ.2,499-ன் நன்மைகள்:

பிஎஸ்என்எல்லில் இருந்து ரூ.2,499 க்கு ஒரு பிராட்பேண்ட் திட்டமும் கிடைக்கிறது, இது 100 எம்.பி.பி.எஸ் வேகத்தின் கீழ் நாள் ஒன்றிற்கு 40 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. டேட்டா வரம்பு முடிந்த பின்னர் இணைய வேகமானது 4 எம்.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும்.

மற்ற திட்டங்களும் நன்மைகளும்!

இப்படியாக நிறுவனத்தின் ரூ.4,499 திட்டமானது 55 ஜிபி அளவிலான தினசரி டேட்டாவையும், ரூ.5,999 திட்டமானது 80 ஜிபி அளவிலான தினசரி டேட்டாவையும், ரூ.9,999 பிராட்பேண்ட் திட்டமானது 120 ஜிபி அளவிலான தினசரி டேட்டாவையும் வழங்குகிறது.

பிரீமியம் திட்டமான ரூ.16,999 ஆனது 170 ஜிபி அளவிலான தினசரி டேட்டாவை வழங்குகிறது. இந்த அனைத்து பிஎஸ்என்எல் பாரத் ஃபைபர் திட்டங்களும் வரம்பற்ற குரல் அழைப்பு சேவை வழங்குகிறது.

ஜியோ ஃபைபர் ரூ 2,499 திட்டம் vs பிஎஸ்என்எல் ரூ 1,999 பாரத் ஃபைபர் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ மொத்தம் ஆறு ஜியோ ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களை 100 எம்.பி.பி.எஸ் என்கிற அடிப்படை வேகத்தின் கீழ் தொடங்கி 1 ஜி.பி.பி.எஸ் என்கிற அதிகபட்ச வேகத்தின் கீழ் தொகுத்துள்ளது. குறிப்பாக ஜியோ ஃபைபரின் ரூ.2,499 ஆனது, பிஎஸ்என்எல்-ன் ரூ.1,999 பிராட்பேண்ட் திட்டத்துடன் எங்கோ ஒரு புள்ளியில் போட்டியிடுவதாக தெரிகிறது.

ஜியோ ஃபைபர் ரூ 2,499-ன் நன்மைகள்!

நன்மைகளை பொறுத்தமட்டில், ஜியோ அதன் ரூ .2,499 திட்டத்துடன், 500 எம்.பி.பி.எஸ் வேகத்தின் கீழ் 500 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. வரம்பு முடிந்த பின்னர் இணைய வேகமானது 1 எம்.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். உடன் 4K Set-Top Box மற்றும் Giga TV அழைப்பு சேவை உடனாக லேண்ட்லைன் வாய்ஸ் காலிங் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here