மூளைச்சாவு அடைந்த பெண்ணிற்கு 117 நாள் கழித்து பிறந்தது குழந்தை!!

0
48
மூளைச்சாவு அடைந்த பெண்ணிற்கு 117 நாள் கழித்து பிறந்தது குழந்தை
செக் குடியரசு நாட்டில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் பர்னோவில் உள்ள மருத்துவ பல்கலையில் அனுமதிக்கப்பட்டார். இவர் அனுமதிக்கப்படும் போது சுயநினைவற்ற நிலையிலிருந்தார். மேலும் அவர் 4 மாத கர்ப்பிணியாகவும் இருந்தார்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதைக் கண்டுபிடித்தனர். அதன் பின்னர் டாக்டர்கள் அவர் வயிற்றில் வளரும் குழந்தையைப் பத்திரமாகா பெற்றெடுக்க வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து அந்த பெண்ணிற்கு உயிர் காக்கும் உபகரணங்கள் பொருத்தப்பட்டது. மூளைச்சாவு அடைந்தாலும், அவரின் உடல் செயல்பட்டு வந்ததால் இது சாத்தியம் என டாக்டர்கள் கருதினர்.

இதையடுத்து அந்த பெண் 24 மணி நேரமும் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். மேலும் அவர் உடல் அசைவுகள் இல்லாமல் இருந்தால் குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் மூளைச்சாவு அடைந்த பெண்ணிற்கு இயந்திரம் மூலம் உடற் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

குழந்தை கிட்டத்தட்ட நல்ல வளர்ச்சியை அடைந்த நிலையில் சுகப்பிரசவம் சாத்தியம் இல்லாததால் டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் பெண்ணை குழந்தையை வெளியே எடுக்க முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி மூளைச்சாவு அடைந்த பெண்ணிற்கு சுமார் 117 நாட்களுக்குப் பின்பு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது.

இதில் அந்த பெண்ணிற்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு எலிஸ்க்கா எனப் பெயர் சூட்டப்பட்டது. குழந்தை பிறந்த பின்பு எலிஸ்க்காவின் தாய்க்கு உயிர் காக்கும் கருவிகள் அகற்றப்பட்ட இந்த உலகை விட்டு மறைந்துவிட்டார் அந்த மூளைச்சாவு அடைந்த தாய்.

மூளைச்சாவு அடைந்த ஒரு தாயின் வயிற்றில் 117 நாட்கள் வளர்ந்து குழந்தை பிறந்த சம்பவம் இதுவே முதன் முறையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here