பச்சோந்தி போன்று போலியானவர் லோஸ்லியா என்று அவார்டு கொடுத்த சாக்ஷி!!

0
51

இன்றைய பிக் பாஸ் 3 புரோமோ வீடியோவில், லோஸ்லியாவிற்கு பச்சோந்தி போன்று போலியானவர் என்பதற்கான அவார்டு கொடுப்பதும், அதனை லோஸ்லியா தூக்கி எறிவது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

பச்சோந்தி போன்று போலியானவர் லோஸ்லியா: அவார்டு கொடுத்த சாக்ஷி!
கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த வாரம் கலகலப்பாக சென்ற நிலையில், இந்த வாரம் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏற்கனவே வனிதாவால், ஏகப்பட்ட பிரச்சனை இருக்கும் நிலையில், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சாக்‌ஷி, அபிராமி, மோகன் வைத்யா ஆகியோர் சிறப்பு விருந்தினராக வந்துள்ள நிலையில், அவர்களாலும் குறிப்பாக சாக்‌ஷியால் பிரச்சனை எழுந்து வருகிறது.
காரணம், பிக் பாஸ் வீட்டில், கவின், லோஸ்லியா, சாக்‌ஷி, அபிராமி, ஷெரின் ஆகியோரிடையே உறவில் இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் அபிராமி உடன் நெருங்கி பழகி வந்த கவின், நாட்கள் செல்ல செல்ல அவருடன் பழகுவதை தவிர்த்தார். இதையடுத்து, சாக்‌ஷியுடன் நெருங்கி பழகினார். இருவரும் காதலர்களாக வலம் வந்தனர். கவின் மற்ற பெண்களுடன் பேசுவது சாக்‌ஷிக்கு பொறாமையை ஏற்படுத்தியது. இது, நாளடைவில் பெரிய பிரச்சனையை ஏற்படுத்த சாக்‌ஷி கவின் உறவில் விரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், தற்போது கவின் லோஸ்லியா இருவரும் காதலித்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் மக்களால் வெளியேற்றப்பட்ட சாக்‌ஷி, மறுபடியும் வீட்டிற்கு வந்துள்ளதால், கவின் லோஸ்லியா காதலுக்கு இடையூறாக பிரச்சனையை ஏற்படுத்தி வருகிறார். இதனால், பிக் பாஸ் வீட்டில், தற்போது போட்டியாளர்கள் இரு அணிகளாக இருக்கின்றனர். வனிதா, ஷெரின், சேரன், தர்ஷன் ஆகியோர் ஒரு அணியாகவும், லோஸ்லியா, கவின், சாண்டி, முகென் ஆகியோர் ஒரு அணியாகவும் இருக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று வெளியான பிக் பாஸ் புரோமோ வீடியோ போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. தொடக்கம் முதல் உண்மையாகவே இருந்து வரும் லோஸ்லியாவிற்கு பச்சோந்தி போன்று போலியானவர் விருது கொடுக்கப்படுகிறது. இந்த விருதை மோகன் வைத்யா அறிவிக்க, சாக்‌ஷி லோஸ்லியாவிற்கு கொடுக்கிறார். இதில் கோபமடைந்த லோஸ்லியா அந்த விருதை அங்கேயே தூக்கி எறிகிறார்.

உனக்கு வேண்டாம் என்றால், நீ கொண்டு சென்று வெளியில் தூக்கி எறி. இங்கே போடக்கூடாது என்று மோகன் வைத்யா கூற, எனக்கு வேண்டாம் நான் இங்கே தான் போடுவேன் என்று லோஸ்லியா தெரிவிக்கிறார். இதையடுத்து, நானும், இங்கிருந்து எதற்கு அவார்டு கொடுக்கணும். நானும் கொடுக்க மாட்டேன் என்று சாக்‌ஷியும் மேடையை விட்டு கீழே இறங்கி செல்கிறார். ஒரு நடுவருக்கு மரியாதை இல்லை, மூத்தவர்களுக்கும் மரியாதை இல்லை என்றால், என்ன நடக்கிறது.

ஒரு கட்டத்தில், சாக்‌ஷி நான் உன்னிடம் பேசவில்லை. நான் கேமரா முன்பாக பேசிக்கொண்டு இருக்கிறேன். எல்லாமே உன்னால்தான் பிரச்சனை வருகிறது என்றும், லோஸ்லியாவை மரியாதை இல்லாமலும் பேசுகிறார். இதற்கு ஆத்திரமடைந்த லோஸ்லியா, நீ வா போ என்று பேசாதீர்கள் என்கிறார். இப்படியே வாக்குவாதம் முற்றுகிறது. புரோமோ வீடியோவும் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here