அடிச்சு நொறுக்கிய ஸ்டீவ் ஸ்மித்…கதறிய இங்கிலாந்து பவுலர்கள்!!

0
52

மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஆஷஸ் டெஸ்டில், சதம் விளாசிய ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் சச்சின் சாதனையை தூள் தூளாக்கினார்

ஹைலைட்ஸ்

  • மூன்று ஆஷஸ் தொடரில் 500 ரன்களுக்கு மேல் அடித்து முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்.
  • இரண்டாவது நாள் தேனீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 369 ரன்கள் எடுத்துள்ளது.
இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் பாரம்பரிய ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் முதல் மூன்று டெஸ்டின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளது.
இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி, மான்செஸ்டரில் நடக்கிறது. இதன் முதல் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்திருந்தது.

ஸ்மித் சதம்…
இரண்டாவது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு, ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் அரங்கில் 26வது சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இந்திய ஜாம்பவான் சச்சின் சாதனையை தகர்த்தெறிந்தார்.

அதிவேக மைல்கல்
இந்நிலையில் சர்வதேச டெஸ்ட் அரங்கில், அதிவேகமாக 26 சதங்களை எட்டிய வீரர்கள் பட்டியலில், இந்தியாவின் சச்சினை, ஸ்மித் மூன்றாவது இடத்துக்கு தள்ளினார். சச்சின் இம்மைல்கல்லை 136 இன்னிங்சில் இந்த சாதனையை எட்டினார். ஸ்மித் தனது 121வது இன்னிங்சில் இந்த மைல்கலை எட்டியுள்ளார். ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் இப்பட்டியலில் ‘நம்பர்-1’ இடத்தில் உள்ளார்.

டெஸ்ட் அரங்கில் குறைந்த இன்னிங்சில் 26 டெஸ்ட் சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்….
டான் பிராட்மேன் (ஆஸி.,) – 69 இன்னிங்ஸ்
ஸ்டீவ் ஸ்மித் (ஆஸி.,) – 121 இன்னிங்ஸ்
சச்சின் (இந்த்யா) – 136 இன்னிங்ஸ்
சுனில் கவாஸ்கர் (இந்தியா) – 144 இன்னிங்ஸ்
மாத்யூ ஹேடன் (ஆஸி.,) – 145 இன்னிங்ஸ்

காலிஸ் சாதனை சமன்…
தவிர, அதிக முறை ஒரு டெஸ்ட் தொடரில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் முன்னாள் தென் ஆப்ரிக்க வீரர் காலிஸ் (4 சதம்) சாதனையை ஸ்டீவ் ஸ்மித் சமன் செய்தார். இப்பட்டியலில் பிராட்மேன், சாபர்ஸ் ஆகியோர் (தலா 5 சதங்கள்) முதலிடத்தில் உள்ளனர்.

11வது சதம்….
தவிர, ஒரே எதிரணிக்கு எதிராக அதிக சதம் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஜாம்பவான் சச்சினின் சாதனைய ஸ்மித் சமன் செய்தார்.

ஒரே எதிரணிக்கு எதிராக அதிக சதம் விளாசிய வீரர்கள்:
பிராட்மேன் (19 சதம்) – எதிர், இங்கிலாந்து
கவாஸ்கர் (13 சதம்) – எதிர், வெஸ்ட் இண்டீஸ்
ஹாப்ஸ் (12 சதம்) – எதிர், ஆஸ்திரேலியா
ஸ்டீவ் ஸ்மித் (11 சதம்) – எதிர், இங்கிலாந்து
சச்சின் (11 சதம்) – எதிர், ஆஸ்திரேலியா

ஸ்மித் ‘500’..
தவிர மூன்று ஆஷஸ் தொடரில் 500 ரன்களுக்கு மேல் அடித்து முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் ஸ்டீவ் ஸ்மித். இந்தாண்டு தொடரில் ஸ்மித் இதுவரை 546* ரன்கள் அடித்துள்ளார். australia vs england

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here