சிவகார்த்திகேயனுடன் விஜய் போட்டி போட முடியாது!!!

0
59

ரஜினிக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்குச் செல்லும் என்ற கேள்வி வந்தால், காலம் சிவகார்த்திகேயன் என அடையாளம் காட்டும் என்று மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் விஜய் போட்டி போட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய்க்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர் படங்களின் வசூல் ரஜினி படங்க்களை மிஞ்ச்சி வருகிறது. அடுத்த சூப்பர்ஸ்டார் என அஜித், விஜய் பெயர்களே அடிபட்டு வந்த நிலையில் பிரபல அரசியல் வாதி சசிகலா புஷ்பா சிவகார்த்திகேயன் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனப் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் “பிகில்” படம் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் படம் “பிகில்”. “தெறி” மற்றும் “மெர்சல்” படத்தைத் தொடர்ந்து அட்லியும் விஜய்யும் மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்துள்ளனர். தற்போது “பிகில்” திரைப்படம் தீபாவளிக்கு ரீலீசாகும் என்று தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் “தர்பார்” திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். தற்போது ரஜினிக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் பட்டம் சிவகார்த்திகேயனுக்கு என்று விஜய்க்கும் சிவகார்த்திகேயனுக்கும் சண்டை மூட்டி விட்டுள்ளார் எம்.பி சசிகலா புஷ்பா.

“பிகில்” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அவர்களைத் தொடர்ந்து கதிர், இந்துஜா முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் ஜாக்கி ஷெராப் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ ஜி எஸ் சார்பில் கல்பாத்தி அகோரம் இப்படததை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ரூபன் எடிட் செய்ய விஷ்னு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் இப்படத்தில் அப்ப, மகன் என்று இரு வேடங்களில் நடிக்கிறார். மகன் விஜய் பெண்கள் கால்பந்து விளையாட்டு கோச்சாகவும், அப்பா விஜய் தாதாவாகவும் நடிப்பதாக சொல்லப் படுகிறது.

சிவகர்த்திகேயன் பசங்க பாண்டிராஜ் இயக்கும் “நம்ம வீட்டுப்பிள்ளை” படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனை அடித்து “ஹீரோ” என்ற படத்தில் அனைவரையும் மிரளவைக்கும் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் சிவகர்த்திகேயன். இப்படம் இந்த வருடம் இறுதியில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

“ஹீரோ” படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்கின்றனர். இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் அபய் தியோல், விவேக், யோகி பாபு மற்றும் பலர் நடிக்க உள்ளானர். இப்படத்தில் கதாநாயகியாக கல்யாணி நடிக்கவுள்ளார். இவர் பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனின் மகள். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் மேலும் இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கவுள்ளார் இரும்புத்திரை மித்ரன்.

பலவருடங்களாக சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். தற்போது சூப்பர் ஸ்டார் இடத்தைப் பிடிப்பதற்காக பல நடிகர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ரஜினியை அடுத்து முன்னணி நடிகர்களாக தமிழ்த்திரையுலகில் வலம் வரும் விஜய், அஜித், ஆகியோரை அவரவர் ரசிகர்கள் சூப்பர் ஸ்டாராகவே கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பிரபல வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்திருக்கும் மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா, சினிமா தொடர்பான எந்த பின்புலமும் இல்லாமல் சாதாரண குடும்பத்திலிருந்து வெள்ளித்திரையில் சாதித்து சூப்பர் ஸ்டார் இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன் என்று பேசியுள்ளார். விஜய்க்கு துணிச்சல் இருந்தால் சிவகார்த்திகேயன் படத்தோடு ரிலீஸ் செய்து போட்டி போட சொல்லுங்கள் பார்க்கலாம் என்றும் உசுப்பேற்றியுள்ளார்.

வசூலில் சக்ரவத்தி யார் என்று தயாரிப்பாளர் கூறிவிடுவார்கள். ரஜினிகாந்துக்கு அடுத்து யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்வி வந்தால் காலம் சிவகார்த்திகேயனை அடையாளம் காட்டும், என்று பேசி இரண்டு ரசிகர்களுக்கும் சண்டையை மூட்டியுள்ளார் எம்.பி சசிகலா புஷ்பா. இவரது இந்த பேச்சு ரசிகர்களை சண்டையில் இழுத்துவிடாமல் இருந்தால் போதும் என்று பேசி வருகின்றனர் சினிமா ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here