ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் பாட்டி…! மிக்ஸி, கிரைண்டர் இல்லாத பாட்டி சமையல்!!

0
175

கோவை அருகே ஒரு பாட்டி இன்று ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி விற்பனை செய்து வருகிறார். அவரது இட்லியை சாப்பிட ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

கோவை ஆலந்தூரை அடுத்த வடிவேலம்பாளையம் பகுதியில் வசித்து வரும் 85 வயது மூதாட்டி கமலாத்தாள். இவரை இப்படிச் சொன்னால் அப்பகுதியில் யாருக்கும் தெரியாது. ஆனால் ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்று சொன்னால் சின்ன குழந்தை கூட நம் கையை பிடித்து இவர் இருக்கும் இடத்திற்குக் கொண்டு சென்று விடும் அந்த அளவிற்கு இந்த பாட்டி பிரபலம்.

ஏன் பிரபலம் என்பது அவரது பெயர் மூலமே உங்களுக்குத் தெரியவரும். 85 வயதாகும் இந்த பாட்டி இன்றும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வருகிறார். கணவரை இழந்து தனிமையில் வாழும் இந்த பாட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 25 பைசா செலவில் இட்லி விற்கத் துவங்கினார். இந்த பாட்டி. நாளடைவில் விலைவாசி ஏற ஏற கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்தார். இன்று வரை விலையை ஏற்றாமல் தொடர்ந்து ஒரு ரூபாய்க்கே விற்பனை செய்து வருகிறார்.

இவர் இட்லிக்குச் சட்னியை கிரைண்டரில் அரைப்பது இல்லை உரலில் தான் அரைக்கிறார். இவர் வைக்கும் சாம்பாருக்கு அங்கு வாடிக்கையாகச் சாப்பிட வருபவர்கள் எல்லாம் அடிமை தான். இந்த சாம்பாருக்கான மசாலாவையும் அவரே சொந்தமாகச் செய்து வருகிறார். மசாலா பொடிகளைக் கடைகளில் வாங்குவது இல்லை. சட்னியை அம்மியில் அரைக்கிறார்.

லாபத்தை இலக்காக கொள்ளாமல் தன்னை நம்பி வரும் வாடிக்கையாளர்களின் மனதையும் வயிற்றையும் குளிர்விப்பதே தன் மனமகிழ்ச்சி எனச் சொல்லி நம்மைக் கண் கலங்க வைத்துவிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here