சொந்த மண்ணில் சொதப்பிய இலங்கை… தொடரை வென்ற நியூசிலாந்து!

0
43

கண்டி: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், கிராண்ட்ஹோம், புரூஸ் அரைசதம் அடித்து கைகொடுக்க நியூசிலாந்து அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

ஹைலைட்ஸ்

  • இரு அணிகள் மோதும் கடைசி டி-20 போட்டி வரும் 6ம் தேதி பல்லேகலேவில் நடக்கிறது.

இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி 2 டெஸ்ட், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் போட்டி 1-1 என சமனில் முடிந்தது. முதல் டி-20 போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரு அணிகள் மோதிய இரண்டாவது டி-20 போட்டி, பல்லேகலேவில் நடந்தது.

டிக்வெலா ஆறுதல்….
இதில் ‘டாஸ்’ வென்ற இலங்கை கேப்டன் மலிங்கா முதலில் ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு குசல் மெண்டிஸ் (26), குசல் பெரேரா (11) சுமாரான துவக்கம் அளித்தனர்.

அடுத்து வந்த அவிஸ்கா பெர்னாண்டோ (37), டிக்வெலா (39) ஓரளவு கைகொடுத்தனர். பின் வரிசை வீரர்கள் சொதப்பலாக வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது.

புரூஸ் அரைசதம்
எட்டக்கூடிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு முன்ரோ (13), டிம் செய்பர்ட் (15) சொதப்பலான துவக்கம் அளித்தனர். பின் வந்த கிராண்ட்ஹோம், டாம் புரூஸ் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இலங்கை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி அணியை வேகமாக வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்றது. ஒருகட்டத்தில் கிராண்ட்ஹோம் (59) அரைசதம் அடித்து வெளியேற, புரூஸ் (53) விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி நேரத்தில் சாண்டனர் ஓரளவு கைகொடுக்க, நியூசிலாந்து அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சொந்தமண்ணில் சொதப்பல்
இதன் மூலம் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-0 என கைப்பற்றி அசத்தியது. இலங்கை அணி சொந்தமண்ணில் தொடரை இழந்து சொதப்பியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here