ஆறுகளை பாதுகாக்க பிரபலங்களுடன் இணைந்த த்ரிஷா!

0
48

தமிழின் முன்னணி ஹீரோயினாக விளங்கும் த்ரிஷா ஜக்கி வாசுதேவ் அமைப்பு மூலம் நடத்தப்படும் காவேரி அழைப்பு எனும் மரம் நடும் பங்களிப்பில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

2002 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளியான “மௌனம் பேசியதே” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. அப்படத்தைத்தொடர்ந்து “சாமி”, “கில்லி”, “ஆயுத எழுத்து”, “உனக்கும் எனக்கும்”, “அபியும் நானும்”, “விண்ணைத்தாண்டி வருவாயா”, “என்னை அறிந்தால்”, “96”, “பேட்ட” போன்ற வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் த்ரிஷா. தற்போது இவர் “கர்ஜனை”, “சதுரங்க வேட்ட 2”, “பரமபதம் விளையாட்டு”, “ராங்கி” மற்றும் “சுகர்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குநர் மணிரத்னம் தன் கனவுப்படைப்பாக உருவாக்கி வரும் பொன்னியன் செல்வனில் இணைந்திருக்கிறார். த்ரிஷா சமூக அக்கறையுடன் நிறைய காரியங்களில் ஈடுபடுபவர். தெரு நாய்களௌக்கென்று ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பில் உலக யுனிசெஃப். நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதராகவும் உள்ளார். இப்படி பல சமூக நல விஷயங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் ஜக்கி வாசுதேவ் (cavery calling ) காவேரி அழைப்பு எனும் அமைப்பு மூலம் ஆறுகளை காப்பதற்கு ஆறுகளின் கரைகளில் மரங்களை நடுவதை தொடங்கியுள்ளார். இதற்காக நடிகர் கமல் ஹாசனை அவர் சந்தித்தார். கமல் ஹாசன், சமந்தா முதலான பல பிரபலங்கள் உணர அமைப்பில் இணைந்துள்ளனர்.

இந்த அமைப்பில் இப்போது திரிஷா இணைந்திருக்கிறார். இதற்காக அவர் ஜக்கி வாசுதேவை சந்தித்துள்ளார். திரிஷா பக்தியில் மிகவும் நாட்டம் கொண்டவர் ஆன்மிகத்தில் அக்கறை கொண்டவர். சத்குருவை சந்திக்க வேண்டும் என்பது எனது நெடுநாள் கனவு இப்போது நிறைவேறியுள்ளது. இதற்காக ஈஷாவுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆறுகளை பாதுக்காகும் இந்த வழிமுறையின் தன்னையும் இணைத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here