ஸ்பெஷல் தயிர் சாதம்

0
9

தேவையான பொருட்கள்

பச்சரிசி – 2 கப்,
பால் – அரை கப்,
புளிக்காத புதிய தயிர் – இரண்டரை கப்,
இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்தரைத்த விழுது – 2 டீஸ்பூன்,
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,
பெருங்காயம் – அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, மல்லித் தழை – சிறிது,
கடுகு – 1 டீஸ்பூன், மிளகாய் வற்றல் – 3,
பொடியாக நறுக்கிய முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்,
திராட்சை – 15, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

 

செய்முறை

  • சாதத்தை குழைவாக வேக வையுங்கள். சாதம் சூடாக இருக்கும்போதே அதனுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது, பால் மற்றும் கறிவேப்பிலை, மல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்குங்கள்.
  • எண்ணெயில் கடுகு, மிளகாய், முந்திரி, திராட்சை (திராட்சை சிவக்கக் கூடாது) ஆகியவற்றை தாளியுங்கள்.
  • சாதத்தில் தாளிதக் கலவை, தயிரைக் கலக்குங்கள்.
  • சுவையான ஸ்பெஷல் தயிர் சாதம் நொடியில் ரெடி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here