ஆஷஸ் தொடரில் இருந்து அனுபவ ஆண்டர்சன் விலகல்: நான்காவது டெஸ்ட் அணி அறிவிப்பு!

0
57

லண்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான அணியை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • முதல் மூன்று டெஸ்டின் முடிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாரம்பரிய ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. இம்முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடராகவும் ஆஷஸ் தொடர் கருதப்படுவதால், பரபரப்பு அதிகரித்துள்ளது.

தலைகீழான போட்டி:
இந்நிலையில் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பர்மிங்ஹாமில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இரண்டாவது டெஸ்ட் ‘டிரா’வில் முடிந்தது. மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்து வெல்ல, தொடர் தற்போது 1-1 என சமனில் உள்ளது.

ஆண்டர்சன் விலகல்
இந்நிலையில் இரு அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி, வரும் செப்டம்பர் 4ம் தேதி மான்செஸ்டரில் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் 13 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

இதில் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் எஞ்சியுள்ள ஆஷஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கிரேக் ஓவர்டன் அணியில் சேர்க்கப்பட்டார்.

இங்கிலாந்து அணி விவரம்
ஜோ ரூட் (கே), ஜோப்ரா ஆர்சர், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டுவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரண், ஜோ டென்லே, ஜாக் லீச், கிரேக் ஓவர்டன், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here