வெறும் ரூ.5,499 மற்றும் ரூ.6,999-க்கு இந்தியாவில் 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்; நம்பி வாங்கலாமா?

0
170

இதன் அட்டகாசமான வடிவமைப்பிற்கும், மலிவான விலைக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது!

முன்னர் அறிவிக்கப்பட்டதை போலவே டெக்னோ ஸ்பார்க் தொடர் ஸ்மார்ட்போன்கள் ஆனது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தொடரின் கீழ் இரண்டு புதிய மாடல்கள் வெளியாகி உள்ளன – Spark Go மற்றும் Spark Air.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பிலான, 19.5: 9 என்கிற அளவிலான திரை விகிதம் மற்றும் 85 சதவீத ஸ்க்ரீன்-து-பாடி விகிதம் ஆகியவைகளை கொண்ட 6.1 இன்ச் அளவிலான எச்டி+ 2.5டி கர்வ்டு டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே புதிய AI read mode உள்ளது. இது வாசிக்கும் போது டிஸ்பிளேவின் பிரகாசத்தையும் வண்ணங்களையும் தானாக சரிசெய்யும் திறனை கொண்டது. உடன் இவைகள் புதிய 3டி பின்புற உறை வடிவமைப்பு மற்றும் சாய்வு பூச்சுடன் வருகிறது.

நிறுவனத்தின்படி, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே, Localized AR sticker-கள் மற்றும் சிறப்பான செல்பீக்களை உறுதி செய்யும் Wide-selfie mode ஆகியவைகளையும் கொண்டிருக்கும். மேற்கூறப்பட்டுள்ள அம்சங்கள் எதுவுமே, இதை வாங்கச்சொல்லி உங்களை ஈர்க்கவில்லை என்றால், மேற்கொண்டு படிக்கவும்.

டெக்னோ ஸ்பார்க் கோ மற்றும் ஸ்பார்க் ஏர்-ன் இந்திய விலை நிர்ணயம்:

டெக்னோ ஸ்பார்க் கோ ஆனது இந்தியாவில் ரூ.5,499 என்றும், மறுகையில் உள்ள டெக்னோ ஸ்பார்க் ஏர் ஆனது ரூ.6,999 என்றும் விலை நிர்ணயம் பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் நாடு முழுவதும் உள்ள 35,000+ ஆஃப்லைன் சில்லறை கடைகளில் வாங்க கிடைக்கின்றன.

விற்பனை சலுகை ஏதேனும்?

இருக்கிறது! ஸ்பார்க் கோ ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு (குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும்) ரூ.799-க்கு அதன் ப்ளூடூத் ஹெட்செட்டை வழங்குகிறது. இது தவிர்த்து டெக்னோ நிறுவனமானது, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும், ஒரு வருட காலத்திற்க்குள்ளான One-time screen replacement மற்றும் 100 நாட்களுக்குள்ளான இலவச Replacement மற்றும் 1 மாத காலம் நீடிக்கப்பட்ட வாரன்டி ஆகியவைகளையும் அறிவித்துள்ளது.

டெக்னோ ஸ்பார்க் கோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

டெக்னோ ஸ்பார்க் கோ ஆனது 6.1 இன்ச் அளவிலான எச்டி+ டிஸ்ப்ளே, 19.5: 9 என்கிற திரை விகிதத்துடன் கொண்டுள்ளது. செல்ஃபி கேமராவுக்கு இடமளிக்கும் டாட் நாட்ச் வடிவமைப்பை பெற்றுள்ளது. இது 2GHz க்வாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ 22 ப்ராசஸர் உடனாக 2 ஜிபி ரேம் + 16 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பின் கீழ் இயக்கப்படுகிறது. இது 256 ஜிபி வரையிலான மெமரி விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது.

ஸ்பார்க் கோ ஆனது ஆண்ட்ராய்டு 9.0 பை அடிப்படையிலான HiOS 5.0 கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்குகிறது. அது உங்களுக்கு AI வீடியோ கால், ஸ்மார்ட் பேனல், தொந்தரவு இல்லாத Notification management, AI ரீட் மோட், AI பேட்டரி லேப் மற்றும் Safe Charging போன்ற அம்சங்களை வழங்கும்.

கேமரத்துறையை பொறுத்தவரை, ஸ்பார்க் கோ ஆனது எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 எம்பி பின்புற கேமராவையும், முன்புறத்தில் 5 எம்பி அளவிலான செல்பீ கேமராவையும் கொண்டுள்ளது. இதில் கைரேகை சென்சார் இல்லை, எனவே பயனர்கள் பாதுகாப்புக்காக ஃபேஸ் அன்லாக் 2.0-ஐ நம்ப வேண்டியிருக்கும். இது ஒரு 3,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

டெக்னோ ஸ்பார்க் ஏர் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

மறுகையில் உள்ள, டெக்னோ ஸ்பார்க் ஏர் ஸ்மார்ட்போனும் அதே 6.1 இன்ச் அளவிலான எச்டி+ டிஸ்ப்ளே, 19.5: 9 என்கிற திரை விகிதத்துடன் கொண்டுள்ளது. செல்ஃபி கேமராவுக்கு இடமளிக்கும் டாட் நாட்ச் வடிவமைப்பை பெற்றுள்ளது. இதுவும் 2GHz க்வாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ 22 ப்ராசஸர் உடனாக இயங்குகிறது.

ஆனால் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டுள்ளது. இதுவும் 256 ஜிபி வரையிலான மெமரி விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது. ஸ்பார்க் ஏர் ஆனது கோ மாடலை போன்றே ஆண்ட்ராய்டு 9.0 பை அடிப்படையிலான HiOS 5.0 கஸ்டம் ஸ்கின் கொண்டு இயங்குகிறது.

கேமரத்துறையை பொறுத்தவரை, ஸ்பார்க் ஏர் ஆனது அதன் பின்புறத்தில், டூயல் கேமரா அமைப்பை பெற்றுள்ளது. அதாவது 13MP அளவிலான முதன்மை சென்சார் உடனாக எல்.ஈ.டி ஃபிளாஷ் கொண்ட விஜிஏ கேமரா ஒன்றை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், எல்இடி ப்ளாஷ் கொண்ட 5 எம்பி அளவிலான செல்பீ கேமராவை கொண்டுள்ளது. பாதுகாப்புக்காக பின்புற கைரேகை சென்சார் ஆனால் ஃபேஸ் அன்லாக் 2.0 உள்ளது. இது ஒரு 3,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here