இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்!!

0
57

கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில், இந்திய அணியில் குழப்பம் நீடிக்கிறது.

ஹைலைட்ஸ்

  • இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடக்கிறது.
  • இதில் இந்திய அணியின் விளையாடும் லெவன் வீரர்கள் தேர்வு கேப்டன் கோலிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி, ஆண்டிகுவாவில் நடந்தது. இதில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

இன்று ஆரம்பம்
இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் இன்று துவங்குகிறது. இந்நிலையில் இரு அணிகள் மோதிய முதல் டெஸ்டில் கடந்த முறை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் கலக்கிய தமிழக வீரர் அஸ்வின் இடம் பெறாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மீண்டும் குழப்பம்
இந்திய அணியில் மாயங்க் அகர்வால், விஹாரி போன்ற ஜூனியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் போது, ஒருநாள் கிரிக்கெட்டில் கில்லியாக கலக்கும் சீனியர் ரோஹித் ஷர்மாவை புறக்கணிப்பது சரிதான என ஒருபுறம் கேள்வி எழுகிறது.

அடுத்த சேவாக்
அதே போல, ஒருநாள் அரங்கில் துவக்க வீரராக பலமுறை இந்திய அணிக்காக வெற்றி தேடித்தந்த ரோஹித்துக்கு இதுவரை டெஸ்ட் அரங்கில் துவக்க வீரர் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஒருவேளை அந்த சோதனை கைகொடுத்தால், டெஸ்ட் அரங்கில் அதிரடி மன்னன் சேவாக்கிற்கு அடுத்தபடியா ரோஹித் அதிரடி துவக்க வீரராக உருவாக வாய்ப்புள்ளது.

அஸ்வினா? ஜடேஜாவா?
இதே போல ஆல் ரவுண்டர் இடத்தில் ரவிந்திர ஜடேஜா வாய்ப்பை பயன்படுத்தினாலும், அஸ்வினுக்கு ஒரு வாய்ப்பு வழங்குவது நியாயம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here