குழந்தைகள் விரும்பி உண்ணும் சிக்கன் பரோட்டா!!

0
13

தேவையான பொருட்கள்:

எலும்பு இல்லத சிக்கன் – 1/2 கிலோ
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
சீரகம், மிளகாய் தூள் – 1/4 ஸ்பூன்
தனியா தூள் – 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக)
கொத்தமல்லி – 1 கைப்பிடி
வெங்காயம் – 2
மிளகு தூள் – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மைதா – ஒரு கப்

செய்முறை:

  • முதலில் ஒரு பவுலில் ஒரு கப் மைதாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவேண்டும்.
  • பின்னர்  ஒரு துணியால் மூடி அரை மணிநேரம் ஊறவிடவேண்டும். சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, அரை வேக்காடு வேகவைத்து கொள்ளவும்.
  • அதாவது ஒரு வானலியில் சிக்கனை போட்டு அவற்றில் சிறிதளவு எண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
  • சிக்கன் வெந்ததும் மிக்ஸியில் சேர்த்து  அரைத்து வைத்து கொள்ளவும்.
  • பின்பு அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து நன்கு பொடிதாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் சிறிதளவு உப்பு, வெங்காயம் நன்கு வதக்கி, மசாலாப்பொருட்களான மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் சீரக தூள், ஒரு டீஸ்பூன் தனியா தூள், ஒரு டீஸ்பூன் இஞ்சி  பூண்டு விழுது, டீஸ்பூன் மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
  • பின்பு அரைத்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து  வதக்கவும்.
  • பிசைந்து வைத்துள்ள மைதா மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி கட்டையில் மைதா மாவை தேய்த்து அதனுள் சிக்கன் கீமாவை வைத்து மடிக்கவேண்டும். பின்னர் திரும்பவும் சப்பாத்தி பலகையில் வைத்து சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்.
  • இதனை தோசை  கல்லில் போட்டு சிறிதளவு எண்ணெய் விட்டு, இரண்டு பக்கமும் பிரட்டி எடுத்தால் சுவையான சிக்கன் பரோட்டா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here