நாட்டுக்கோழி சிக்கன் கொத்து பரோட்டா

0
90

தேவையான பொருட்கள்

பிய்த்த பரோட்டா – 2,
பிய்த்த நாட்டுக்கோழி சிக்கன் – தேவையான அளவு,
முட்டை -1,
எண்ணெய் – தேவையான அளவு,
தக்காளி -1,
வெங்காயம் -1,
கறிவேப்பிலை – சிறிதளவு,
நாட்டுக்கோழி சால்னா, மல்லி இலை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை

  • சூடான கடாயில் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதனுடன் பிய்த்த பரோட்டா மற்றும் பிய்த்த சிக்கன், முட்டை, சால்னா சேர்த்து நன்கு கிண்டவும்.
  • கொத்தமல்லி இலை தூவி கிண்டவும்.
  • சரியான பக்குவத்தில் பிரட்டி எடுத்தால் பார்டர் நாட்டுக்கோழி கொத்து பரோட்டா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here