குழந்தைகள் விரும்பி உண்ணும் சுவையான ரவை கேக்!!

0
10

என்னென்ன தேவை?

வெண்ணெய் – 100 கிராம்,
சர்க்கரை – 200 கிராம்,
தயிர் – 125 மி.லி.,
பால் – 250 மி.லி.,
வெனிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்,
ரவை – 250 கிராம்,
மைதா – 60 கிராம்,
பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்,
உப்பு – 1/4 டீஸ்பூன்,
நட்ஸ் – (முந்திரி, திராட்சை, 8 பாதாம்),
டூட்டி ஃப்ரூட்டி – 1 கப்.

எப்படிச் செய்வது?

  • ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், சர்க்கரை மற்றும் தயிர் சேர்த்து பீட்டரில் பீட் செய்துகொள்ளவும். பிறகு பால் மற்றும் வெனிலா எசன்சை சேர்த்து கலக்கவும்.
  • மைதா, ரவை, பேக்கிங் பவுடரை சலித்து சிறிது சிறிதாக வெண்ணெய் கலவையில் சேர்த்துக் கிளறவும்.
  • பிறகு சிறிதாக நறுக்கிய நட்சையும் டூட்டி ஃப்ரூட்டியை சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பிறகு வெண்ணெய் மற்றும் மாவு தூவிய பேக்கிங் பேனில் சேர்த்து ஃப்ரீ ஹீட் செய்தா அவனில் 350C- 40 நிமிடம் பேக் செய்து எடுத்தால் சுவையான ரவை கேக் ரெடி.

குறிப்பு: ஃப்ரீ ஹீட் 200C- 10 நிமிடம் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here