முள்ளங்கி சட்னி

0
15

தேவையான பொருட்கள்:

முள்ளங்கி – 100 கிராம்
பெரிய வெங்காயம் – 3
தேங்காய் – கால் மூடி
கடலைப் பருப்பு – 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1/2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 5
புளி – நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை – 1 கொத்து
எண்ணெய் – 2 குழிக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • முள்ளங்கியை பொடியாகவும், வெங்காயத்தை நீளவாக்கிலும் நறுக்கிக் கொள்ளுங்கள். தேங்காயைத் துருவிக்கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய முள்ளங்கி போட்டு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கவும்.வதக்கியதும் வெங்காயத்தை போட்டு மேலும் வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
  • அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலைப்பருப்பு,  உளுத்தம்பருப்பு, சீரகத்தையும் சேர்த்து பொரிய விடுங்கள்.
  • பின்னர் அதில் காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • தேங்காய் துருவல் புளி சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடுங்கள். அனைத்தையும் ஆறவைத்து மிக்சியில் போட்டு அரைக்கவும்.
  • கடைசியாக கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக்  கொட்டவும்.
  • சுவையான முள்ளங்கி சட்னி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here