ருசியான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி?

0
11

ருசியான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் :

பிரியாணி அரிசி – 1 டம்ளர் பீன்ஸ்,கேரட், காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு – தேவைகேற்ப நெய் – 2 டேபிள் ஸ்பூன், பெரிய வெங்காயம் – 2 முந்திரிப் பருப்பு – 20 கிராம்பு – 6 லவங்கப்பட்டை – 6 ஏலக்காய் – 6 வெள்ளைப் பூண்டு உரித்தது – 6 பல்லு பெரிய தேங்காய் – 1/2 மூடி பச்சை மிளகாய் – 2 உப்பு தேவையான அளவு

செய்முறை :

  • முதலில் காய்கறிகளைச் சிறிய துண்டுகளாக நறுக்கி திட்டமான பதத்தில் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் தேங்காயை துருவிப் பால் எடுத்துக் கொண்டு, கிராம்பு, பட்டை, ஏலக்காயை அம்மியில் பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி காயவிடவும். அதனுள் முந்திரி, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  • அம்மியில் வைத்து பொடித்தவை மற்றும் தேங்காய் பாலுடன் 2 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  • அதன் பின்னர் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள அரிசியை போடவும். தீயை சிம்மில் வைத்து நிதானமாக எரிய விடவும். அரிசி வெந்ததும் வேக வைத்த காய்கறி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்.
  • இதற்கு தக்காளி தொக்கு அல்லது தயிர் பச்சடி பொருத்தமாக இருக்கும்.
  • தற்போது ருசியான தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி ரெடி.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here