முட்டை கட்லெட்

0
13

தேவையான பொருட்கள்:

முட்டை – 4,
கறி மசாலா தூள் – 2, ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
பெரிய வெங்காயம் – 1,
பிரட் – 4 துண்டு
கார்ன் பிளார் மாவு – 1/2 ஸ்பூன்
கடலை மாவு – 2 ஸ்பூன்

செய்முறை

  • முதலில் முட்டைகளை வேகவைத்து பிறகு அதனை தோல் உரித்து ஒரு பவுலில் போட்டு கையால் பிசைந்து கொள்ளவும்.
  • அதனுடன் கறிமசாலா, உப்பு, கொத்தமல்லி மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து சிறிதளவு நீர் சேர்த்து பிசைந்து  கொள்ளவும்.
  • பிறகு இதனை நீளவாக்கில் உருண்டையாக சின்ன, சின்ன துண்டுகளாக பிடிக்க வேண்டும். பிறகு பிரட் துண்டுகளை மிக்சியில் போட்டு, தூளாக அரைத்து அதனுடன் கார்ன் மாவு சேர்த்து வைத்து கொள்ளவும்.
  • மற்றொரு தட்டில் கடலை மாவை சிறிதளவு நீர் சேர்த்து கலந்து ஏற்கனவே பிடித்து வைத்துள்ள துண்டுகளை கடலை மாவு தட்டில் உருட்டி  எடுத்து பிறகு அதனை பிரட் தூளில் உருட்டிக் கொள்ள வேண்டும்.
  • அனைத்து தூண்டுகளையும் இவ்வாறாக தயார் செய்து வைத்து  கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயில் தயார் செய்த கட்லெட் துண்டுகள் மூழ்காத அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடேற்றி அந்த கட்லெட் துண்டுகளை போடவும்.
  • இருபுறமும் வேகும் வகையில் திருப்பி விட்டு 1 நிமிடம் வரை எண்ணெய்யில் போட்டு எடுத்தால் சுவையான முட்டை கட்லெட்  தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here