2019 சைமா விருதுகளை வென்றவர்கள் முழு விபரம் !!

0
55

சைமா விருதுகள் இந்திய சினிமாவில் மதிப்புமிக்க ஒன்றாக கருதப்படுகிறது. பொதுவாக ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு உற்சாகமூட்டக்கூடிய விஷயமாக இருப்பது அவருக்கான பாராட்டுகளும், அங்கீகாரமும் தான். அந்த வகையில், சினிமா துறையில் சிறந்து விளங்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், காமெடியன்கள் ஆகியோர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை பல்வேறு பெயர்களில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், கடந்த 7 ஆண்டுகளாக தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது எனப்படும் சைமா விருதுகள் சினிமாவில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான 8ஆவது சைமா விருது வழங்கும் விழா வரும் நேற்று முதல் நடைபெற்று வருகிறது.

இந்த விருதுக்கு தற்போது பரிந்துரைக்கப்பட்ட நடிகர், நடிகைகள், சிறந்த படம், இயக்குனர்கள், காமெடியன்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர், பின்னணி பாடகர், வில்லன் பிரிவில் வென்றவர்கள் விவரம்

சிறந்த படம் – பரியேறும் பெருமாள்

சிறந்த இயக்குனர் – பாண்டிராஜ் ( கடைக்குட்டி சிங்கம் )
சிறந்த நடிகர் – தனுஷ் ( வட சென்னை )

சிறந்த நடிகர் விமர்சகர் விருது- ஜெயம் ரவி(அடங்கமறு )

சிறந்த நடிகை விமர்சகர் விருது- ஐஸ்வர்யா ராஜேஷ் ( கனா )

சிறந்த நடிகை விருது – த்ரிஷா ( 96 )
சிறந்த துணை நடிகர் – பிரகாஷ் ராஜ் ( 60 வயது மாநிறம் )
சிறந்த துணை நடிகை – ஈஸ்வரி ராவ் (காலா )
சிறந்த வில்லன் பாத்திரம் – வரல்ட்சுமி சரத்குமார் ( சர்கார் )
சிறந்த இசையமைப்பாளர் – அனிருத் (கோலமாவு கோகிலா )
சிறந்த காமெடி – யோகிபாபு (கோலமாவு கோகிலா )

சிறந்த பாடலாசிரியர் – விக்னேஷ் சிவன் (நானா தானா – தானா சேர்ந்த கூட்டம்)
சிறந்த பின்னணி பாடகர் – அந்தோணி தாசன் – சொடக்கு மேல (தானா சேர்ந்த கூட்டம்
சிறந்த பின்னணி பாடகி – தீ (தீக்‌ஷிதா வெங்கடேசன் ) ரௌடி பேபி (மாரி 2)
சிறந்த ஒளிப்பதிவாளர் – ஆர் டி ராஜசேகர் ( இமைக்கா நொடிகள் )

மேலும்
சிறந்த அறிமுக இயக்குநர் – நெல்சன் ( கோலமாவு கோகிலா )

ஜூரிக்களின் சிறந்த நடிப்பு விருது – கதிர் (பரியேறும் பெருமாள்)
அர்ப்பணிப்பு விருது – பாடலாசிரியர் நா முத்துக்குமார்

ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here