கொலையுதிர் காலம் சினிமா விமர்சனம்

0
118
நடிகர்கள்:
நயன்தாரா,பூமிகா
இயக்கம்:
சாக்ரி டோலட்டி
கதை – அனாதை பெண் நயன்தாரா ஒரு ஆசிரமத்தில் வளர்கிறார். ஓவியம் வரைவதில் திறமையாளியான அவர் பார்க்காத தம் ஆசிரமத்து உரிமையாளரை அச்சு அசலாக வரைந்து வைத்திருக்கிறார். அதை பார்க்கும் உரிமையாளர் அவரை தத்தெடுத்து கொள்கிறார். அவரின் இறப்புக்கு பின் மொத்த சொத்தும் நயன்தாராவுக்கு வருகிறது. அதற்காக அமெரிக்கா செல்கிறார். அங்கே அவரது உறவினர்கள் பூமிகா மற்றும் அவரது கணவர் சொத்துக்காக சண்டையிடுகிறார்கள். இதனிடையில் நயன்தாராவை ஒருவர் கொல்ல முயல்கிறார். முடிவில் என்ன நடக்கிறது என்பதே கதை.

விமர்சனம் – பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னால் இப்படம் திரைக்கு வந்திருக்கிறது. படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட பிரச்சனைகள் படத்தை வெகுவாக பாதித்திருப்பது படம் முழுதும் தெரிகிறது. நயன்தாரா காது கேளாத ஊமைப்பெண்ணாக நடித்திருக்கிறார். நடிக்க அதிக வாய்ப்புள்ள பாத்திரம் கிடைக்கும் இடங்களில் சிக்சர் அடிக்கிறார். ஆனால் அவருக்கு திரைக்கதையில் வாய்ப்பு தான் வழங்கப்பட வில்லை. பூமிகா வில்லியாக, அவரது முகம் வில்லிக்கு ஏற்றதல்ல. ஆனாலும் கலக்கியிருக்கிறார். படத்தின் மீது ஈர்ப்பு வருமளவு திரைக்கதை இல்லாதது வருத்தமே. நயன்தாரா ஒருவர் நடிப்பதால் படம் ஓடிவிடும் எனும் மனநிலையில் படமெடுத்தது போல் இருக்கிறது. பின்பாதி முழுதும் ஓடல் துரத்தல் என ஒரு வீட்டுக்குள் நிகழ்வது மட்டுமே காட்டப்படுகிறது. நம்மை தியேட்டரை விட்டு துரத்துவது போலவே இருக்கிறது.

நடிகர்கள் தங்கள் பணியை சரியாக செய்திருக்கிறார்கள் ஆனால் கதை திரைக்கதை எதுவும் நம்மை ஈர்க்காத விதத்தில் உள்ளது. திரில்லர் பாணி திரைப்படம் சாக்ரி டோலட்டி உருவாக்கத்தில் கவனம் ஈர்த்தவர் படத்திம் கதையில் பெரிதாக கோட்டை விட்டிருக்கிறர்.

அச்சு ரமாமணி இசை படத்தின் பல இடங்களில் இசை மட்டுமே தான் படத்தை நகர்த்துகிறது. ஏதுமே இல்லாத காட்சிகளை ஒப்பேற்றி தந்திருக்கிறார். கேரி கெர்யக் ஒளிப்பதிவு ஹாலிவுட் பாணியில் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தில் ஒரே ஆறுதல் அவர் தான். கொலையுதிர் காலம் பெருத்த ஏமாற்றம்.

பலம் – நயன்தாரா

பலவீனம் – கதை, திரைக்கதை, காட்சிகள்.

இறுதியாக – கொலையுதிர்காலம் பூத்துக்குலுங்கும் என்ற எதிர்பார்ப்பில் தீ வைத்திருக்கிறது. கொலையுதிர் காலம் வறண்ட காலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here