நாட்டுக்கோழி தண்ணீர் குழம்பு

0
50

என்னென்ன தேவை?

நாட்டுக்கோழி – 1/2 கிலோ,
வெங்காயம் – 200 கிராம்,
கொங்கு கறி பொடி – 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு,
கடுகு, கறிவேப்பிலை – சிறிது,
காய்ந்தமிளகாய் – 4.

எப்படிச் செய்வது?

  • சின்ன வெங்காயத்தை எண்ணெய் விட்டு நன்றாக வதக்கி எடுத்து அதனுடன் கறி பொடி, மஞ்சள் தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெயை காயவைத்து கடுகு, கறிவேப்பிலை, காய்ந்தமிளகாய் தாளித்து இஞ்சிபூண்டு விழுது போட்டு வதக்கி, கறியை சேர்த்து சுருள வதக்கவும்.
  • பின்பு அரைத்த விழுது, உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சிறு தீயில் வைத்து நன்றாக வேகவைத்து இறக்கவும்.
  • சுவையான நாட்டுக்கோழி தண்ணீர் குழம்பு ரெடி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here