இஞ்சினியரிங் படித்தவர்களுக்கு தமிழக போக்குவரத்துத் துறையில் வேலை!!

0
160
மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய பிரிவுகளில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு போக்குவரத்துத்துறையில் பயிற்சிப் பணி வாய்ப்பு.

பல்வேறு பொறியியல் துறை பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு தமிழக போக்குவரத்துத்துறையில் வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் அப்ரண்டிஸ் காலிப் பணியிடங்களுக்கான பயிற்சிப் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. மொத்தம் 96 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வித் தகுதி

மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், சிவில், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய பிரிவுகளில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்த வேலை வாய்ப்புக்கு முயற்சிக்கலாம்.

வயது வரம்பு

பயற்சிப் பணிக்கான விதிமுறைகளின்படி வயது வரம்பு இருக்கும்.

சம்பளம்

பிரிவு 1ல் பயிற்சிப் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு 4,984 ரூபாய் மாதச் சம்பளம் தரப்படும். பிரிவு 2ல் சேர்ந்தால் 3,542 ரூபாய் மாதச் சம்பளம் கிடைக்கும்.

விண்ணப்பக் கட்டணம்

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பக் கட்டணம் ஏதும் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை

இந்தப் பயிற்சிப் பணி ஓராண்டு காலம் அளிக்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.mhrdnats.gov.in/ என்ற தேசிய பயிற்சிப் பணி திட்டத்துக்கான இணையதளத்தின் (NATS portal) மூலம் விண்ணப்பிக்கலாம். முதலில் இந்த இணையதளத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கும் முறை குறித்த வழிகாட்டுதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அளிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தேதிகள்

தேசிய பயிற்சிப் பணி திட்டத்துக்கான இணையதளத்தில் பதிவு செய்ய கடைசி நாள் – ஆகஸ்ட் 19, 2019
ஆன்லைனில் விண்ணபிக்க கடைசி நாள் – ஆகஸ்ட் 26, 2019
தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகும் நாள் – ஆகஸ்ட் 28, 2019
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாட்கள் – செப்டம்பர் 4 & 5, 2019

எல்ஐசி நிறுவனத்தில் எக்கச்சக்க வாய்ப்புகள்! விண்ணப்பிக்க முந்துங்கள்!

இந்த வேலை வாய்ப்பு குறித்து மேலும் அறிய கீழ்க்காணும் இணைப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கலாம்.
http://boat-srp.com/wp-content/uploads/2019/08/TNSTC-CBE-Ltd-Coimbatore-Web-Publish-Advt.pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here