ஃபாஸ்ட் அண்ட் புயூரியஸ் ஹாப்ஸ் அண்ட் ஷா சினிமா விமர்சனம்

0
222
நடிகர்கள்
டுவைன் ஜான்சன்,ஜேசன் சதாதம்,கிறிஸ் மோர்கன்,ஐடிரிஸ் எல்பா
கரு – உலகை காப்பற்றும் ஹாலிவுட் ஹீரோக்கள் தான் கரு. இம்முறை வைரஸ்ஸிடமிருந்து உலகை காப்பாற்றுவது தான் கரு.

கதை – ஃபாஸ்ட் அண்ட் புயூரியஸ் படத்தொடரில் வரும் இரண்டு முக்கிய பாத்திரங்களான ஹாப்ஸ் அண்ட் ஷா , இருவரும் இணைந்து உலகை அழிக்கும் வல்லமை கொண்ட வைரஸை , கைப்பற்ற போரடும் வில்லனிடமிருந்து , உலகை காப்பது தான் கதை. ஹாப்ஸ் அண்ட் ஷா இருவரும் எதிரெதிர் துருவங்கள். இருவரும் எப்போதும் சண்டை போட்டுக்கொள்ளும் குணமுடையவர்கள். ஷாவின் தங்கை ஒரு சீக்ரெட் மிஷனின் போது உலகை அழிக்கும் வல்லமை உள்ள வைரஸை தன் உடலில் ஏற்றிக்கொள்கிறார். அழிக்க முடியாத இயந்திர பலம் கொண்ட வில்லன் , அந்த வைரஸை அடைய நினைக்கிறான். அவனிடமிருந்து ஷாவின் தங்கையையும், உலகையும் காப்பாற்ற ஷாவும், ஹாப்ஸ்ம் இணைகிறார்கள். அவர்கள் உலகை காப்பாற்றினார்களா என்பதே கதை.

விமர்சனம் – ஃபாஸ்ட் அண்ட் புயூரியஸ் உலகம் முழுதும் அதிக ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ள படத்தொடர். அப்படங்களில் இன்றியமையாத விசயம் கார், பெண், கடத்தல் , கண்கள் மூடா ஆக்சன். எல்லாப்படங்களிலும் கிட்டத்தட்ட ஒரே கதை தான் சொல்லப்பட்டிருக்கும். அதில் காட்டப்படும் அந்த டீம் ஒரு குடும்பமாகிவிட்டது ரசிகர்களுக்கு!

அதிலிருக்கும் இரு கேரகடர்ளின் தனி spin off தான் இந்தப்படம் இப்படங்களில் கார் சேசிங், கார் சண்டை , சரியாகத்தான் வாசித்தீர்கள் கார்கள் சண்டையிடும் , கட்டிடத்திற்கு கட்டிடம் தாவுவார்கள், கார்கள் பறக்கும், துப்பாக்க்கி சண்டை இருக்கும். இவையனைத்தும் இதிலும் அப்படியே இருக்கிறது.

ஆரம்பத்தில் ஒரு ஆக்சன் பிளாக், இடையில் இரண்டு பின் கிளைமாக்ஸ்ல் ஒன்று இதற்கு இடையில் கேரக்டர்களின் விரிவாக்கம் அவர்களின் காமெடி இது விதிக்கப்பட்ட பாலிவுட் பாணி ஆக்சன் திரைக்கதை. இப்படத்திலும் அது அச்சரம் பிசகாமல் வந்திருக்கிறது. அது ரசிக்கும்படியும் இருக்கிறது.

Jason Satatham, Dwayne Jhonson இருவருக்கும் ஒரு கெமிஸ்ட்ரி இருக்கிறது. அது படத்தில் அட்டகாசமாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இந்த இருவரின் ஆக்சன்கள் தனித்தனியே படங்களில் வந்திருக்கிறது. இருவரும் இணையும் சுவாரஸ்யம் தான் படத்தில் புதிது. இருவர் பேசும் பஞ்களும், மாறி மாறி இருவரும் கலாய்த்து கொள்வதும் படத்தை ரசிக்க வைக்கிறது. படத்தில் வரும் தங்கை கேரக்டரும் கலக்கியிருக்கிறது. இருவருக்கும் சரியான ஜோடியாகிறார்.

எல்லா ஆக்சன் ப்ளாக்குகளிலும் ஹீரோக்களே ஜெயிப்பது படத்தின் சுவாரஸ்யத்தை குறைக்கிறது. இதனை தனியே தொடரும் திட்டம் இருக்கிறது போலும். டெட்பூல் பட புகழ் ryan reynolds படத்தில் வந்து போகிறார். அடுத்த படத்தில் அவரின் ஆக்சனை சேர்த்து பார்க்கலாம். இந்தப்படத்தில் என்ன எதிர்பார்ப்போமோ அது அப்படியே வந்திருக்கிறது. அதை கொண்டு வந்ததில் இயக்குநர் வென்றிருக்கிறார். ஆனால் சிறப்பாக மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்படி படத்தில் எதுவும் இல்லாதது குறை. நம்ப முடியாத ஆக்சன் காட்சிகளை படக்குழு சாதித்து காட்டியிருக்கிறது. ஹாலிவுட் ஆக்சன் விரும்பிகளின் படம். தாராளமாக ஒரு முறை பார்த்து விட்டு வரலாம்.

பலம் – பழக்கப்பட்ட கேரக்டர்களின் ஆக்சன், ஃபாஸ்ட் அண்ட் புயூரியஸ் அறிமுகம் இந்தப் பலம்.

பலவீனம் – இடையில் போரடிக்கும் தெரிந்த திரைக்கதை.

ஃபைனல் பஞ்ச்
– ஹாலிவுட் ஆக்சன் விரும்பினால் கண்டிப்பாக பார்க்கலாம். மற்றவர்கள் ஒதுங்கி கொள்வது நலம். `

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here