கழுகு 2 மினி விமர்சனம்

0
65
நடிகர்கள்
கிருஷ்ணா,பிந்து மாதவி,எம் எஸ் பாஸ்கர்

கரு: ஒரு தவறை தெரிந்து செய்யும் போது அதன் பின் வரும் விளைவுகளை யாராக இருந்தாலும் அனுபவித்தே தீர வேண்டும் என்பதே கழுகு 2 படத்தின் மையக்கரு.

கதை – செந்நாய் உலவும் காட்டை ஏலம் எடுப்பவர் அங்கே வேலைக்கு வரமாட்டார்கள் என்பதால் துப்பாக்கி சுடும் வேட்டையாளை வேலைக்கு வைக்க விருப்பப்படுகிறார். அதற்காக தேனியில் திருட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தும் கிருஷ்ணாவையும் காளி வெங்கட்டையும் , போலீஸ் துப்பாக்கியை திருடி ஓடும்போது பார்க்கும் எம் எஸ் பாஸ்கர் அவர்களை வேட்டையாள் என நினைத்து காட்டுக்கு கூட்டி வருகிறார். அந்த காட்டில் அவர்கள் பிழைத்தார்களா? அங்கே கிருஶ்ணாவுக்கு ஏற்படும் காதல், திருட்டு அவர்கள் வாழவை எப்படி பாதிக்கிறது என்பதே கதை.

விமர்சனம் – கழுகு 1ம் பாகத்தின் களம் மாறிய மறுபதிப்பு தான் கழுகு 2 . ஆனால் கழுகு ஈர்த்த அளவு இல்லாமல் சராசரியான முயற்சியாக முடிந்து விடுகிறது. முழுப்படமும் காட்டுக்குள் நடப்பதால் காட்டின் பிரமாண்டம் படத்திற்குள்ளும் வந்து விடுகிறது. செந்நாய் கூட்டம் உலவும் காடு எனும் பில்டப்பில் படம் ஆரம்பிக்கிறது. இரண்டு காட்சிகளுக்கு பிறகு செந்நாய் காணாமல் போய் விடுகிறது. பிந்து மாதவிக்கும் கிருஷ்ணாவுக்குமான காதல் தான் படத்தின் அடிநாதம் இருவரின் கெமிஸ்ட்ரியும் அழகாக இருக்கிறது. அவர்களுக்கு காதல் ஏற்படும் காரண காரியங்கள் ஒட்டவே இல்லை. மேலும் கழுகு படத்தில் பார்த்த அதே காதல் காட்சிகள் பல இடங்களில் ரிலீஸ் மோட் ஆகிறது.

காளிவெங்கட் என்ன மாதிரியான பாத்திரம் என்பதற்கு எந்த விளக்கங்களும் இல்லை. திடீர் திடீரென அந்த கேரக்டர் மாறுவது லாஜிக் சொதப்பல். படம் எதை நோக்கி பயணிக்கிறது என்கிற குழப்பம் படத்தின் பாதியில் வந்து விடுகிறது. காதலை சொல்லிக்கொண்டிருக்கும் திடீரென டிராக் மாறி திருட்டுக்குள் நுழைந்து விடுகிறது. இப்படி படத்தில் நம்மை குழப்பும் விசயங்கள் அதிகம். கிருஷ்ணா, பிந்து மாதவி இருவரும் கழுகு படத்தை பிரதிபலித்திருகிறார்கள். ஆழமில்லாத கேரக்டருக்கு நிறைய உழைத்திருப்பது ஃபிரேமில் தெரிகிறது.

சத்ய சிவா ஆச்சர்யம் அளித்த கழுகு மூலமே மீண்டும் வர நினைத்திருக்கிறார். ஆனால் அதை அப்படியே செய்திருப்பது தான் நமக்கு சுவாரஸ்யத்தை தராமல் போய்விட்டது. முடிவை எழுதிவிட்டு அதை நோக்கியே பயணித்திருக்கிறார்கள் ஆனால் அப்படியிருந்தும் முடிவு திணித்த மாதிரியே தெரிகிறது. இந்த முடிவு தேவைதானா என தோன்றிக்கொண்டே இருக்கிறது. திரைக்கதையில் முடிச்சுகள் எதுவும் இல்லாமல் ஒற்றை சீக்வென்ஸ் பின்பாதி முழுதையும் நகர்த்துவது சலிப்பு. இப்படத்தி பெரிய ஆறுதல்களில் ஒன்று யுவன் சங்கர் ராஜாவின் இசை.

படம் முழுதுமே தாலாட்டிக்கொண்டே இருக்கிறது. கேமரா ராஜா நாமும் காட்டுக்குள் இருப்பது போன்ற உணர்வை தந்திருகிறார். எடிட்டிங் தேவையான வேலையை செய்திருகிறது. கழுகு என்ன தான் சொதப்பலகள் படம் நெடுக இருந்தாலும் முழுப்படத்தையும் பார்க்க முடிகிறது. பட டீமின் முயற்சி படம் முழுதும் தெரிகிறது.

பலம் – காடு , கிருஷ்ணா, பிந்து மாதவி.

பல்வீனம் – திரைக்கதை, பழசான காட்சி அமைப்புகள்.

பைனல் பஞ்ச் – கழுகு 2 நல்ல முயற்சி தான் ஆனால் வெறும் முயற்சியாக முடிந்து விடுவது வருத்தம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here