விஸ்வாசத்தை மிஞ்சும் பிகில்: பிரமாண்டமாக உருவாக்கப்படும் கிளைமேக்ஸ் காட்சி!!!

0
87

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் படம் “பிகில்”.தெறி மற்றும் மெர்சல் படத்தைத் தொடர்ந்து அட்லியும் விஜய்யும் மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்துள்ளனர். அட்லி மாஸ், கமர்ஷியல் ஃபார்முலாவை இந்தப் படத்திலும் கடைபிடிப்பார் என்று சொல்லலாம். இப்படத்தில் விஜய்க்கு நயன்தாரா ஜோடியாக நடிக்கிறார். கதிர், இந்துஜா முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறாரகள். ஜாக்கி ஷெராப் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். ஏ ஜி எஸ் சார்பில் கல்பாத்தி அகோரம் இப்படததை தயாரிக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ரூபன் எடிட் செய்ய விஷ்னு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

விஜய் இப்படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். மகன் விஜய் பெண்கள் கால்பந்து விளையாட்டு கோச்சாகவும், அப்பா விஜய் தாதாவாகவும் நடிப்பதாக தெரிகிறது. இப்படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகள் தற்போதுநடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.நேற்று அதிகாரப்பூர்வமாக படத்தின் சிங்கப்பெண்ணே சிங்கிள் பாடல் வெளியானது. ரசிகர்கள் பாடலை கொண்டாடி வரும் வேளையில் ரசிகரகளுக்கு மீண்டும் ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது.

படத்தை தீபாவளிக்கு வெளியிட தாயரிப்புக் குழு திட்டமிட்டு உள்ளது. இந்த நிலையில் படத்தின் முக்கிய பணியான கிராபிக்ஸ் வேலைகள் பரபரப்பாக தொடங்கி தற்போது நடந்து வருவதாக தெரிகிறது.
படத்தில் ஒரு முக்கிய கால்பந்து போட்டி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியாக இருக்கிறதாம். அதனை உலகத்தரத்தில் உருவாக்க கிராபிக்ஸ் பணிகள் தொடங்கியுள்ளன. இக்காட்சி அனைவரையும் உணச்சிவசப்படும்படியும் பிரமாண்டமாகவும் படமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த செய்தி ரசிகரகளை உற்சாகமடைய வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here