வாட்ச்மேன் வேலை பார்க்கும் வாட்ச்! உங்கள் வீட்டு பெண் குழந்தைகளை பாதுகாக்கும் கேட்ஜெட்!!

0
60

குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், உங்கள் வீட்டு பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய வாட்ச்சை பற்றி இங்கு காணலாம்.

இப்போது உள்ள காலக்கட்டத்தில் ஆள்கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சமூக அவலங்கள் வாடிக்கையாகி வருகின்றன. விளையாடுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றால் கூட, குழந்தைகள், பெண்கள் கடத்தப்படும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இதன் உச்சகட்டமாக பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதும் கொலை செய்யப்படுவதும் தினசரி செய்தித்தாள்களில் பார்க்க முடிகிறது.

இந்த நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் கூடிய பல கேட்ஜெட்ஸ் ஆன்லைனிலும், வெளிக்கடைகளிலும் கிடைக்கிறது. ஜி.பி.எஸ் வாட்ச், ஜி.பி.எஸ் கீ செயின், ஜி.பி.எஸ் கருவிகள் என விலைக்கு தகுந்தாற் போல் விற்பனை செய்யப்படுகிறது.

கண்னை கவரும் நல்ல வண்ணங்களில் குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக ஜி.பி.எஸ்வாட்ச் உள்ளது. இது ஆயிரம் ரூபாயிலிருந்து, தரத்துக்கு ஏற்றவாறு 2,000 மற்றும் 5,000 ரூபாய் வரையில் கிடைக்கிறது. நல்ல தரமான வாட்ச் 2,500 ரூபாயில் கூட பெற முடியும். இதில் ஏற்கனவே ஜி.பி.எஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

இந்த வாட்ச்சை பெற்றோர்கள் தங்களது கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் ஆப் உடன் இணைத்துக் கொள்ளலாம். வாட்ச்சை குழந்தைகளின் கையில் கட்டிவிட வேண்டும். இப்போது குழந்தை எங்கு சென்றாலும், வீட்டில் இருந்தபடி பெற்றோர்கள் ஸ்மார்ட்போனில் பார்த்துக் கொள்ளலாம்.

இதே போல், குறிப்பிட்ட பரப்பளவு எல்லை தாண்டி சென்றால் போனில் அலாரம் அடிக்கும் வகையில், எல்லை அளவை செட் செய்து கொள்ளலாம். மேலும், ஆபத்து ஏதும் வந்தால், குழந்தை வாட்ச்சில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும். உங்கள் போனில் எச்சரிக்கை செய்தி வந்துவிடும்.

இதற்கு அடுத்ததாக 3,000 ரூபாய் வாட்ச்சில் டார்ச் லைட், வைஃபை, கேமரா, மோஷன் டெடக்டர் உள்ளிட்ட அம்சங்களும் உள்ளது. பெற்றோர்கள் இதனை GPS Watch என்று அமேசானில் தேடினாலே கிடைக்கும். உங்கள் வசதி, விருப்பம், பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு பல்வேறு கேட்ஜெட்கள் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here