செட்டிநாடு காளான் மசாலா

0
62

 

எப்படிச் செய்வது?

காளான் – 1 பாக்கெட்
நறுக்கிய வெங்காயம் – 1
நறுக்கிய தக்காளி – 1
கொத்தமல்லி – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு -1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
கடுகு – அரை தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி                                                                                            உப்பு- தேவைக்கு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவைக்கு

எப்படிச் செய்வது?

  • கடாய் ஒன்றில் எண்ணெய் விடாமல் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாய், மிளகு சேர்த்து வறுத்து மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் அரைத்து வைக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய தக்காளி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • பின் காளான் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • தேவையான அளவு உப்பு மற்றும் அரைத்து வைத்த மசாலா கலவையை சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • 1 டம்ளர் தண்ணீர் விட்டு மூடி கொண்டு மூடி 10 நிமிடங்கள் வேக விடவும்.
  • சுவையான செட்டிநாடு காளான் மசாலா தயார்!

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here