இன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு!!

0
215
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் இருந்த ‘பக்’ ஒன்றை கண்டுபிடித்த சென்னையைச் சேர்ந்த லக்‌ஷ்மண் முத்தையாவுக்கு ஃபேஸ்புக் நிறுவனம் 30,000 டாலர், அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 20.64 லட்சத்தை பரிசாக கொடுத்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் பக் கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு ரூ. 20.64லட்சம் பரிசு!!
ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமான இன்ஸ்டாகிராம் தற்போது இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. சினிமா கலைஞர்களும் தங்களது புகைப்படங்களை தினமும் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த 2010ல் துவங்கப்பட்ட இன்ஸ்டாகிராமுக்கு 2019 மே மாதத்தில், ஒரு பில்லியன் பயனீட்டாளர்கள் இருந்தனர். இதுவே தொடங்கியவுடன் ஒரு மில்லியன் பயனீட்டாளர்கள் இருந்தனர். தினமும் 500 மில்லியன் பயனீட்டாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் பெரிய பக் இருந்துள்ளது. இதை சென்னையைச் சேர்ந்த லக்ஷ்மன் முத்தையா கண்டுபிடித்துள்ளார். இந்த பக்கைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் பாஸ்வேர்டு மாற்றி, அனைத்து தகவல்களையும் திருடலாம். கோட் நம்பர் வாங்கி அடுத்தவரின் இன்ஸ்டாகிராமில் எழுத்தில் நுழையலாம் என்பதை கண்டுபிடித்தார்.

இதுகுறித்து முத்தையா கூறுகையில், ”பக் கண்டுபிடித்த பின்னர் ஃபேஸ்புக் பாதுகாப்புக் குழுவுக்கு தெரிவித்தேன். ஆனால், நான் அனுப்பிய தகவல் அவர்களுக்கு சரியாக புரியவில்லை. தொடர்ந்து மெயில்கள் மூலம் விவரித்தேன். வீடியோ மூலம் விளக்கினேன். இதையடுத்தே புரிந்து கொண்டனர். இதற்கு பின்னரே எனக்கு 30,000 டாலரை பரிசாக வழங்கினர்” என்றார்.

இதற்கு முன்னதாக ஃபேஸ்புக்கில் பக் இருந்ததையும் கண்டறிந்து கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here