மண மணக்கும் வெஜ் தம் பிரியாணி…

0
33
தேவையான பொருட்கள்

எண்ணெய், நெய் – 1/2 கப்,
பீன்ஸ் – 1/2 கப்,
பாஸ்மதி அரிசி – 1/2 கிலோ,
கேரட் – 2 (சிறியது),
பச்சை பட்டாணி – 1/2 கப்,
பச்சை மிளகாய் – 4 (அரைத்துக் கொள்ளவும்),
உப்பு – தேவைக்கு,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 3 டீஸ்பூன்,
பட்டை – 1, கிராம்பு – 2, ஏலக்காய் – 1,
பிரியாணி இலை – 2,
குருமிளகு – 10,
Fried onion – 1/2 கப்,
தயிர் – 1/2 கப்,                                                                             கொத்தமல்லி – 1/2 கப்.

செய்முறை

  • ஒரு கனமான பாத்திரத்தில் நெய், எண்ணெய் சேர்த்து அதில் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி அனைத்தையும் தனித்தனியாக வதக்கி வைக்கவும்.
  • பின் அனைத்தையும் சேர்த்து பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி பின் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  • பின் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, குருமிளகு சேர்த்து அதன்பின்  Fried onion  சேர்த்து தயிர் ஊற்றி வேக விடவும்.
  • (தண்ணீர் ஊற்ற வேண்டாம்) பின் ஒரு பாத்திரத்தில் தயார் செய்த மசாலாவை சேர்த்து கொத்தமல்லி தூவி வேக வைத்த அரிசியை சேர்த்து அதன்மேல் புதினா, கொத்தமல்லி, Fried onion, குங்குமப் பூ சாறு ஊற்றி, லெமன் மற்றும் நெய் சேர்த்து சிறிதளவு தண்ணீரை அதன்மேல் தெளித்து 10 நிமிடம் மிதமான சூட்டில் இறக்கவும்.
  • அதன் பின் தம் போட்டு இறக்கினால் கமகமக்கும் சுவையான வெஜ் தம் பிரியாணி தயார்.
  • இதனுடன் தயிர் பச்சடி மற்றும் குருமா சேர்த்து பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here