பிக் பாஸ் வனிதா இத்தனை மோசமா ?அதிர்ச்சியில் ரசிகர்கள்..

0
33
பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர் வனிதா விஜயகுமார் குறித்து புதிய தகவல் வெளியாகி, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுகுறித்த விவரங்களை அறிவோம்.

ஹைலைட்ஸ்

 • பிக் பாஸ் வனிதாவுக்கு மூன்றாவது கணவர் என்று வெளியான தகவலால் புதிய பரபரப்பு.
 • பிக் பாஸ் போட்டியாளர் வனிதா குறித்து வெளியான புதிய தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 • பிக் பாஸ் சீசன் 3 பரபரப்பாக போய்க் கொண்டிருகிறது.இந்த சீசனில் போட்டி பரபரபாக முக்கிய காரணமாக இருப்பவர் வனிதா தான். மற்ற போட்டியாளர்களுக்குள் சண்டை மூட்டி விடுவதும், போட்டியாளர்களை வஞ்சத்துடன் பேசுவதும், தான் சொலவதைத்தான் மற்ற போட்டியாளர்கள் கேட்க வேண்டும் என நடந்து வருகிறார்.
 • பிக்பாஸ் வீட்டுக்குள்தான் அப்படியென்றால் வெளியில் அவரைப் பற்றி தினம் ஒரு சர்ச்சை வெடித்த வண்ணம் உள்ளது. வனிதா தன் பெண்ணை கடத்தி விட்டார் என இரண்டாவது கணவர் புகார் அளிக்க, அந்த வழக்கில் அவர் கைது செய்யப்படும் சூழ்நிலை உருவாகியது. மகள் வனிதாவுக்கு ஆதரவாக பேசிய நிலையில் அப்பிரச்சனை ஒருவாறாக முடிந்தது. இந்நிலையில் இப்போது புதிய அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

  வனிதா இருமுறை விகாரத்து ஆனவர் என்பது தெரிந்த செய்திதான்.ஆனால் டான்ஸ் மஸ்டர் ராபர்ட் உடனும் அவருக்கு திருமணம் ஆனதாக தகவல் வந்துள்ளது. இது மிக அதிர்ச்சியை தந்த நிலையில், வனிதாவிற்கு தான் மூன்றாவது கணவரா? என்பது குறித்து விளக்கமளித்துள்ளார் பிரபல நடன இயக்குநர் ராபர்ட்.

  வனிதா எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற படத்தைத் தயாரித்து நடித்தார். இப்படத்தில் பிரபல நடன இயக்குநர் ராபர்ட் இயக்கி நடித்திருந்தார். இந்தப் படத்தின் போது இருவரும் ஒன்றாகவே சுற்றித் திரிந்தார்கள். அப்போது ஒரு பேட்டியில் ராபர்ட்டுடன் காதல் ஏற்பட்டு கல்யணம் செய்து கொண்டதாக வனிதா அறிவித்தார். இதனால் தான் வனிதாவின் மூன்றாவது கணவர் ராபர்ட் தான் என செய்திகள் சமீபத்தில் வெளியானது.

  ராபர்ட் இது பற்றி கூறும்போது நான் எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் படத்தை அவருடன் இணைந்து தயாரித்துள்ளேன். அவர் தயாரிப்பாளர். நான் இயக்குநர். அவ்வளவுதான் எங்க்களுக்கும் இருக்கும் உறவு. எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் என்னை 3வது கணவர் என சொல்லி, செய்திகள் வருவது எனக்கு மிகுந்த மன உளைச்சலை தருகிறது. அவர் அப்படத்தை புரோமோஷன் செய்வதற்காகத் தான் அப்படி அவர் ஒரு தகவலை பரப்பினார். அவ்வாறு பேட்டி தந்ததற்கு அவரிடம் விளக்கம் கேட்டேன், ராபர்ட் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோ, நம்ம படத்தின் ப்ரோமோஷனுக்காக தான்’ என்று அவர் கூறினார். மற்றபடி நாங்கள் நிஜமாகவே திருமணம் செய்து கொள்ளவில்லை. என ராபர்ட் தெரிவித்துள்ளார்.

  ஒரு படத்தின் புரோமோஷனுக்காக இந்த அளவிற்கு யாரவது செய்வார்களா? என ராபர்ட்டின் இந்தப் பேட்டியால் ரசிகரகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் ராபர்ட்டின் இந்தப் பேட்டியே பொய்யானது என்றும், வனிதாவால் தன் பேயர் கெடக்கூடாது என, அவர் இவ்வாறு செய்வதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். வனிதாவின் பெயரை ராபர்ட் தன் கையில் பச்சை குத்தி இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் உண்மை என்னவென்று தெரியவில்லை. ஆனால் வனிதா பற்றி பரவும் தகவல்களால், தொலைக்காட்சி பார்வையாளர்கள் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here