பிகில் அப்டேட் எதிரொலி: அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் லிரிக் வீடியோ வெளியாக உள்ளதாம்??

0
39
தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குனர் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடித்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, முதல் சிங்கிள் டிராக் வானில் இருள் பாடலின் லிரிக் வீடியோவும் வெளியானது.

நேற்று அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படத்தின் அப்டேட் வெளியானது. அதன்படி, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் வெறித்தனம் என்ற பாடலை பாட உள்ளார். இந்த பாடலுக்கு பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகள் அமைத்துள்ளார். இதைத் தொடர்ந்து, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வானில் இருள் லிரிக் வீடியோவைத் தொடர்ந்து, இப்படத்தின் 2ஆவது சிங்கிள் டிராக் இன்று மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போனி கபூர் கூறுகையில், உங்களது ஹெட்போனை தயாராக வைத்திருங்கள்.

நேர்கொண்ட பார்வை படத்தின் EDM பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 6.45 மணிக்கு வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இப்பாடல், நைட் கிளப்புகளில் பாடும் பாடல் வகையைச் சேர்ந்தது. நேர்கொண்ட பார்வை படம் பெண்களை மையப்படுத்திய படம். அதோடு, டிரைலரை வைத்து பார்க்கும் போது, இப்படத்தில் நடித்துள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தைராங்க் ஆகியோர் நீதிமன்றத்தில் நிற்கின்றனர்.

இதனையெல்லாம் வைத்து பார்க்கும் பொழுது, இந்த கிளப் பாடல் அபிராமி, ஆண்ட்ரியா தைராங்க் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோரை குறிப்பிடும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here