நான் உன்னை பார்த்தாலும்; நீ என்ன பார்க்கக்கூடாது- புதிய உடன்படிக்கையில் கவின், லோஸ்லியா..!

0
48
நான் உன்னை பார்த்தாலும்; நீ என்ன பார்க்கக்கூடாது- புதிய உடன்படிக்கையில் கவின், லோஸ்லியா..!
”சாக்‌ஷி கிட்ட சொல்லாதே” கவின்
பிக்பாஸ் வீட்டில் காதல் மன்னனாக தன்னை காட்டிக் கொள்ளும் கவின், கடந்த சில நாட்களாகவே சாக்‌ஷி அகர்வாலிடம் நெங்கிப் பழகி வருகிறார். ஒன்றாகவே இருப்பது, சாப்பிடுவது, நேரத்தை செலவழிப்பது என்று இருவரும் நாட்களை கடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில், பிக்பாஸ் வீட்டு போர்டிகோவில் அமர்ந்திருந்த சாக்‌ஷி, லோஸ்லியாவிடம் நெருக்கம் காட்ட வேண்டாம். அது தனக்கு வருத்தத்தை தருவதாக கவின் கேட்டுக்கொண்டார்.

அதற்கு சம்மதம் தெரிவித்த கவின், பிக்பாஸ் வீட்டில் நீ தான் என் நெருங்கிய தோழி என்பது போல் சாக்‌ஷியிடம் தெரிவித்தார். இந்த வருத்தம் சில நிமிடங்கள் நிலவினாலும், பிறகு நிலைமை கட்டுக்குள் வந்தது.

அதை தொடர்ந்து, இன்றைக்கான எபிசோட் குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், கழிவறையில் பேசிக்கொள்ளும் கவின் மற்றும் லோஸ்லியா புதிய உடன்படிக்கை செய்து கொள்கின்றனர். அதை சாக்‌ஷிக்கு தெரியக்கூடாது எனவும் முடிவு செய்கின்றனர்.

புதிய உடன்படிக்கையின் படி, அன்றைய நாள் முழுவதும் கவின் தன் முகத்தை பார்க்க கூடாது என்று லோஸ்லியா போட்டி வைக்கிறார். ஒருவேளை இருவரும் பார்த்துக் கொண்டாலும், தான் கவினை பார்க்க அனுமதியுண்டு, ஆனால் கவின் தன்னை பார்க்கக் கூடாது என கட்டளையிடுகிறார்.

இதை பல குழப்பங்களுக்கு இடையில் ஏற்றுக் கொள்ளும் கவின், இருவருக்குமான இந்த உடன்படிக்கை சாக்‌ஷிக்கு தெரிய வேண்டாம் என லோஸ்லியாவிடம் கேட்டுக் கொள்கிறார். இவர்கள் கழிவறையில் பேசிக் கொள்ளும் போது யாரும் உடனில்லை. எனினும், இது சாக்‌ஷிக்கு தெரியவரலாம், அதனால் ஒரு கலகம் ஏற்படலாம் என்பது போலா ப்ரோமோ வீடியோ அமைக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கிய முதல்நாளில் அபிராமி கவின் மீது ஈடுபாடு காட்டினார். பிறகு, சாக்‌ஷியும் கவின் மீது ஈடுபாடு காட்டினார். கவின் தன்னை கண்டுக் கொள்ளவில்லை என்று தெரிந்த பிறகு, முகின் ராவ்விடன் நெருங்கி பழகினார் அபிராமி.

இந்த சந்தர்ப்பத்தில் சாக்‌ஷி, கவினுக்கும் இடையிலான நட்பு நெருக்கம் அடைந்தது. எனினும், கவின் மீது ஈர்ப்பு இருப்பதாக சாக்‌ஷி தான் கூறி வருகிறார். ஆனால் அதுபோல ஒருபோதும் கவின் கூறவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

கடந்த வாரம் கமலுடனான உரையாடலின் போது பேசிய கவின், பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனைத்து பெண்களும் தன்னுடைய நண்பர்கள் தான் என்று தெரிவித்தார். அப்போது சாக்‌ஷியின் முகம் வாடிப்போனதை ரசிகர்கள் கவனித்தனர்.

இதற்கிடையில், கவினுக்கு லோஸ்லியா மீது ஒரு ஈர்ப்பு இருக்கிறது. அதை பலமுறை அவரிடம் கவின் வெளிப்படுத்தினாலும், லோஸ்லியா கவினை அண்ணன் என்று கூறிவிட்டார். எனினும், அவரிடமும் நெருக்கம் காட்ட கவின் முயன்று வருவதாகவே பிக்பாஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here