கோடை வெயிலுக்கு புத்துணர்ச்சி தரும் பானங்கள்!

0
324

அடிப்படைத் தேவையான தண்ணீரைத் தாண்டி மனிதனின் தாகம் தீர்க்கும் பானங்களில்தாம் எத்தனை வகை! ஆதிகாலம் முதல் அவசர யுகம் வரை மனிதக் கலாசாரத்தில் பானங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மினரல் வாட்டர், பால், சூப் வகைகள், சாறு வகைள், காப்பி, தேநீர், பழரசங்கள், மென்பானங்கள், ஆற்றல் பானங்கள், மது என நம் வாழ்க்கையில் 8,000 ஆண்டுகளாக பானங்கள் இடம்பெற்று வருகின்றன.

பழங்கள் ஜூஸாகும்… தயிர் லஸ்ஸியாகும்… பாலே பல்வேறு ருசிகளில் பானங்களாக மாறும்… மோரும்கூட வணிகரீதியில் பானமாக வெற்றிபெறும்… இதையும் அதையும் கலக்க முடியுமா என யோசிப்பதற்குள் `மாக்டெயில்’ வந்து சேரும். இப்படி ஒவ்வொன்றும் இன்னபிற பொருள்களோடு கைகோத்துக்கொண்டு இன்சுவை  பானங்களாகக் காட்சியளிக்கு `வழக்கமான பானங்கள் பலவற்றையும் பலமுறை ருசிபார்த்தாயிற்றே. இன்னும் புதுமையாக என்ன இருக்கு?’ என்கிறவர்களுக்காக ஜில் விருந்து படைக்கிறார் மயிலாப்பூரிலுள்ள தளிகை ரெஸ்டாரென்ட் உரிமையாளர் நளினா கண்ணன். இவர் அளிக்கும் பானங்கள் புதுமையானவை மட்டுமல்ல… சத்துக்கும் சுவைக்கும் உத்தரவாதம் அளிப்பவை… குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டுபவை… சீனியர் சிட்டிசன்களின் பசி, தாகம் தீர்ப்பவை. கோடை விடைபெற்றாலும் கொண்டாட்டங்கள் தொடரட்டுமே… ஜில் அல்லவா!

படங்கள்: பா.கார்த்திகா

1.பட்டர் ஃப்ரூட் சாக்கோ

தேவையானவை:
* நன்கு கனிந்த பட்டர் ஃப்ரூட் (அவகாடோ) – 2
* கெட்டியான பாதாம் மில்க் – அரை கப்
* கோகோ பவுடர் – அரை கப்
* துருவிய டார்க் சாக்லேட் – கால் கப்
* நாட்டுச் சர்க்கரை – அரை கப்

அலங்கரிக்க:
சாக்கோ சிப்ஸ், பழத்துண்டுகள், வீட்டிலேயே செய்த கோதுமை வேஃபல், ஐஸ்க்ரீம் –  தேவைக்கேற்ப

2.வாழைப்பழம் வேர்க்கடலை மில்க்‌ஷேக்

தேவையானவை:
* பச்சை வேர்க்கடலை (தோலுடன்) – 100 கிராம்
* பேரீச்சம்பழம் – 3 (கொட்டை நீக்கவும்)
* வாழைப்பழம் – 2
* தண்ணீர் – 2 கப்
* லவங்கப்பட்டைத்தூள் – அரை சிட்டிகை

செய்முறை:                                                                            வேர்க்கடலையை முதல் நாள் இரவே ஊறவைக்கவும். மறுநாள் காலை ஊறவைத்த வேர்க்கடலையுடன் மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வடிகட்டிப் பரிமாறவும்.

3.மஞ்சள் சோயா மில்க்

தேவையானவை:
* சோயா மில்க் – 2 கப் (கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும்)
* தேன் அல்லது பனங்கற்கண்டு – 2 டேபிள்ஸ்பூன்
* மஞ்சள்சாறு (பசுமஞ்சளை அரைத்து சாறு எடுக்கவும்) – 2 டீஸ்பூன்
* இஞ்சிச்சாறு – ஒரு டீஸ்பூன்
* ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை
* மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை

செய்முறை:

சோயா மில்க்கை வெதுவெதுப்பாகச் சூடாக்கவும். அதில் மற்ற பொருள்களைச் சேர்த்து 5 நிமிடங்களுக்கு மூடிவைக்கவும். பிறகு வடிகட்டவும். இத்துடன், வீட்டிலேயே தயார் செய்த சாக்கோ வால்நட் குக்கீஸைப் பரிமாறலாம்.

4.சாக்கோ கோகோ மில்க்‌ஷேக்

தேவையானவை:
* சாக்கோ சிப்ஸ் – 3 டீஸ்பூன்
* கோகோ பவுடர் – ஒரு டீஸ்பூன்
* குளிரவைத்த தேங்காய்ப்பால் – 2 கப் (கடைகளிலும் ரெடிமேடாக கிடைக்கும்)
* நாட்டுச் சர்க்கரை – 3 டீஸ்பூன்

செய்முறை:

எல்லா பொருள்களையும் பிளெண்டரில் இரண்டு நிமிடங்களுக்கு அடிக்கவும். இதை பனானா வால்நட் கேக் உடன் பரிமாறலாம்.

5.கேரட் முந்திரி ஸ்மூத்தி

தேவையானவை:
* முந்திரி – 4  டேபிள்ஸ்பூன்
* துருவிய கேரட் – 4 டேபிள்ஸ்பூன்
*  பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம் – 3 டேபிள்ஸ்பூன்
* தண்ணீர் – 2 கப்

செய்முறை:

முந்திரியை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் நீரை வடித்துவிட்டு மற்ற பொருள்களுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும்.  விருப்பப்பட்டால் சாக்கோ துருவல் தூவவும். இந்த ஸ்மூத்தியை மல்ட்டிகிரெய்ன் பிரெஞ்ச் டோஸ்ட் உடன் பரிமாறலாம்.

6.கோக்கம் சர்பத் (குடம்புளி சர்பத்)

தேவையானவை:
* குடம்புளி – 2 அல்லது 3
* நாட்டுச் சர்க்கரை – 4 டேபிள்ஸ்பூன்
* குளிர்ந்த நீர் – இரண்டரை கப்
* கறுப்பு உப்பு – ஒரு சிட்டிகை
* புதினா – அலங்கரிக்கத் தேவையான அளவு

செய்முறை:

குடம்புளியை அரை கப் வெந்நீரில் ஊற வைக்கவும். 20 நிமிடங்களுக்கு மூடி வைத்திருந்து, பிறகு சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். அத்துடன் மற்ற பொருள்களைச் சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும். உயரமான டம்ளரில் ஊற்றி, புதினா  தூவவும். இதை  பீட்டா பிரெட் உடன் பரிமாறலாம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here