அஜித்தை பற்றி தவறாக பேசினாரா சித்தார்த்??திடுக்கிடும் தகவல்கள் இதோ…

0
32
லயன் கிங் ஹாலிவுட் ஆக்ஷன் படத்திற்கு சித்தார்த் மற்றும் அரவிந்த்சாமி பின்னனி குரல் கொடுத்துள்ளனர். இதற்காக நடந்த பத்திர்க்கையாளர் சந்திப்பில் சித்தார்த் அஜித்தை தாக்கிப் பேசியதாக கூறப்படுகிறது

அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் உருவாகியுள்ள டிஸ்னியின் பிரமாண்ட லைவ் – ஆக்ஷன் படமான ‘தி லயன் கிங்’ படம் வரும் ஜூலை 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறது டிஸ்னி இந்தியா நிறுவனம். தி லயன் கிங் படத்தின் தமிழ் பதிப்பின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

இதன் தமிழ் பதிப்பில் தமிழின் சிறந்த கலைஞர்களான சித்தார்த் (சிம்பா), அரவிந்த்சாமி (ஸ்கார்), ரவிஷங்கர் (முஃபாஸா), ஐஸ்வர்யா ராஜேஷ் (நாளா), ரோகிணி, சிங்கம் புலி (டிமோன்), ரோபோ சங்கர் (பும்பா), மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்கள். ஜங்கிள் புக் இயக்குனர் ஜான் ஃபேவரூ மிகச்சிறந்த தொழில்நுட்பத்தில் இந்த கதையை படமாக கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் முதன்முறையாக ஃபோட்டோ ரியல் என்ற புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கிறோம்.

வெற்றிப்படங்களின் ரகசியமே எளிமையான கதை தான்: சித்தார்த்!

இவ்விழாவில் பேசிய சித்தார்த், லயன் கிங் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பிடித்த ஒரு திரைப்படம். சாதாரண ஒரு கதையை மிகச்சிறப்பாக சொல்லும் போது அது மிகப்பெரிய வெற்றியை பெறுகிறது. அந்த வகையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறும். என் முகத்தை மட்டுமே பார்த்து பார்த்து டப்பிங் செய்து போர் அடித்து விட்டது, இது கொஞ்சம் புதுமையாக இருந்தது. வாழ்க்கை ஒரு வட்டம், தேவையான நேரத்தில் தேவையான விஷயங்கள் நடக்கும் போன்ற மிகச்சிறந்த விஷயங்கள் இந்த படத்தின் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது.

லயன் கிங் கதையை அமெரிக்காவில் மேடை நாடகத்தில் பார்த்து வியந்திருக்கிறேன். அதை மிகச்சிறந்த தொழில்நுட்பங்களை கொண்டு பெரிய திரையில் மிக பிரமாண்டமாக கொண்டு வந்திருக்கிறார்கள். ஜங்கிள் புக் படத்தையும் தாண்டி ஒரு விஷயத்தை இந்த படத்தில் சாதித்து காட்டியிருக்கிறார்கள். டப்பிங்கில் எப்போதுமே நாம் தான் கிங். அரவிந்த்சாமி, சிங்கம் புலி, ரோபோ சங்கர் டப்பிங் பேசுவதை பார்க்கவே மிகச்சிறப்பாக இருக்கும். ஜூலை 19ஆம் தேதி உங்களை போலவே நானும் இந்த படத்தை பெரிய திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என்றார் நடிகர் சித்தார்த்.

மேலும் தமிழ் நடிகர்கள் யாரும் ஹாலிவுட் படங்கள் போன்று புரொமோஷங்களில் ஈடுபடுவதில்லையே எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சித்தார்த் என்னை உங்களுக்கு பல வருடங்களாக தெரியும். என் எல்லாப் படங்களுக்கும் முழுமையாக புரமோஷங்களில் ஈடுபட்டிருக்கிறேன். பத்திரிக்கையாளர்களையும் தொடர்ந்து சந்த்திது வருகிறேன். என்னைப் பார்த்து ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள், யார் வரவில்லையோ அவர்களை கேளுங்கள் அதை விடுத்து என்னை ஏன் கேட்கிறீர்கள் எனக் காட்டமாக கூறினார்.

தமிழ் சினிமாவில் புரமோஷன்களுக்கும், பத்திரிக்கை சந்திப்பிற்கும் வராதவர் தல அஜித்குமார் தான். அதனால் சித்தார்த் அஜித்தை குறிப்பிடுகிறாரா என அனைவரும் கேட்டு வருகிறார்கள். ஆனால் தன்னை கேள்வி கேட்டதால் பொதுவாகவே பதிலளித்தாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here