வந்துவிட்டது (whatsapp)வாட்ஸ்அப்பிலும் (Dark mode)…

0
857
வாட்ஸ்அப்பில் புதிதாக மூன்று முக்கிய அப்டேட்கள் வரவுள்ளன. அதன் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள் குறித்த விபரங்களை இங்கு காணலாம்.

வாட்ஸ்அப்பை பொறுத்தவரையில், அதில் இலவச மெசேஜ், வாய்ஸ்கால், வீடியோ கால், குரூப் சேட்டிங் என பல்வேறு சிறப்பம்சங்கள் இருப்பதால், உலகில் நம்பர் ஒன் இடத்தில் வாட்ஸ்அப் இருந்து வருகிறது. மேலும், பயனாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் புதிய புதிய வசதிகள் வாட்ஸ்அப்பில் கொண்டு வரப்படுகிறது.

டார்க் மோட் (Dark Mode):
வாட்ஸ்அப்பை இரவில் பயன்படுத்தும் போது அதிகப்படியான வெளிச்சம் காரணமாக கண் கூசுவதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். தற்போது அவர்களது மனக்குறையை போக்கும் வகையில், இரவில் கண்கூசாதாவாறு புதிய வசதி வாட்ஸஅப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கு டார்க் மோட் (Dark Mode) என்று பெயர். முன்னதாக இந்த சிறப்பம்சம் வாட்ஸ்அப் பீட்டா 2.19.82 வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வந்தது. அது வெற்றியடைந்த நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஃபார்வேர்டு மெசேஜ்:
இதே போல், நமக்கு வரும் ஃபார்வேர்டு மெசேஜ், எத்தனை முறை ஃபார்வேர்டு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் வசதியை கொண்டு வருவதற்கு சோதனை செய்து வருகிறது. இந்த வசதி வரும்போது, ஒருவர் நமக்கு ஃபார்வேர்டு மெசேஜ் அனுப்பினாலோ, அல்லது வாட்ஸ்அப்பில் குரூப்பில் வரும் வரக்கூடிய ஃபார்வேர்டு மெசேஜ் எத்தனை முறை ஃபார்வேர்டு செய்யப்பட்டுள்ளது என்பதை அறியலாம். இந்த முறையில், பழைய செய்திகள், காலாவதியான செய்திகள் ஏதேனும் ஃபார்வேர்டு செய்யப்பட்டால், அதனை சுலபமாக அறிந்து கொள்ள முடிகிறது.

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்:
வாட்ஸ்அப்பில் பிளாக் செய்யப்பட்டவர்களின் ஸ்டேடஸ் பயனாளர்களுக்கு தெரியாது. ஒரு வேளை அவ்வாறு ஸ்டேட்டஸ் பார்க்க வேண்டுமென்றால், பிளாக்கை எடுத்து விட்டு தான் பார்க்க முடியும். இதற்கு சுலபமாக Hide Muted Status என்ற வசதியை வாட்ஸஅ்ப் கொண்டு வருகிறது. இதன் மூலம் ஸ்டேட்டஸ் மட்டும் Mute/Show செய்து கொள்ளலாம். எனவே, ஸ்டேட்டஸை பார்க்க வேண்டாம் என்று நினைத்தால் Mute ஆப்ஷனும், பார்க் வேண்டும் என்று நினைத்தால் Show ஆப்ஷனும் தேர்வு செய்து கொள்ளலாம். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here