காளான் சோயா பிரியாணி…

0
258

தேவையான பொருட்கள்

சோயா – 10,
காளான் – 10,
பாஸ்மதி அரிசி – 1 கப்,
பட்டை – 2,
கிராம்பு – 2,
பிரியாணி இலை – 2,
அன்னாசி பூ – 1,
கருப்பு ஏலக்காய் – 1,
பச்சை மிளகாய் – 3,
மல்லித்தூள் – 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி – 1/2 கப்,
Fried onion – 1/2 கப்,
வெங்காயம் – 2,
தக்காளி – 2 (அரைத்தது),
தயிர் – 1 கப்,
தேங்காய்ப்பால் – 1 கப்,
எலுமிச்சம்பழம் – 1,
நெய், எண்ணெய் – 1/4 கப்,
உப்பு – தேவைக்கு,
குங்குமப்பூ – 1/4 கப்.

செய்முறை

  • குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரியாணி இலை சேர்த்து அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • அதில் காளான் மற்றும் சோயாவை சேர்த்து மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து அரைத்த தக்காளியை சேர்த்து தேங்காய்ப்பால், தயிர் சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.
  • தேவையான அளவு உப்பு சேர்த்து அதன்மேல் வேக வைத்த அரிசியை சேர்த்து அதன்மேல் கொத்தமல்லி, புதினா, நெய், Fried onion தூவி குங்குமப்பூ சாறை மேலே ஊற்றி 15 நிமிடம் மிதமான சூட்டில் தம் போட்டுஇறக்கவும்.
  • சுவையான காளான் சோயா பிரியாணி தயார்.
  • இதனுடன் தயிர் பச்சடி மற்றும் குருமா சேர்த்து பரிமாறவும்.            

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here