இன்று மாலை விஜய் பட அறிவிப்பா??பரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர்!குழப்பத்தில் ரசிகர்கள்!!

0
30
விஜய் நடிப்பில் உருவாகி வரும் “பிகில்” படத்தின் புதிய அப்டேட் தொடர்பாக, தயாரிப்பாளர் இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் ”பிகில்” படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா ஜோடியாக நடித்து வரும், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்த நிலையில் இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்திற்கு பிறகு ஷங்கர் படத்தில் நடிக்க விஜய் ஓகே சொல்லியுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இன்று மாலை பிகில் பட தயாரிப்பளர் விஜய் படம் பற்றிய முக்கிய தகவல் ஒன்றை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார். விஜய் அட்லியுடன் மூன்றாம் முறையாக இணந்துள்ள படம் ”பிகில்”. இப்படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் விஜய் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.

நயன்தாரா, யோகி பாபு, விவேக், மேயாத மான் புகழ் சிந்துஜா, பரியேறும் பெருமாள் புகழ் கதிர் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்து வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய் படத்தில் பெண்களுக்கு கால்பந்து பயிற்சி அளிக்கும் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கடந்த வாரம் ”பிகில்” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பு பெற்றது. இன்று மாலை மற்றுமொரு அப்டேட் வெளியாகிறது. ஆனால் இது படத்தின் இசை வெளியீடு, சிங்கிள் வெளியீடு, டீஸர், டிரெய்லர் என எதுவும் இல்லை என்றும், அதை விட முக்கியமான விஜய் பற்றிய மகிழ்ச்சியான தகவல் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் குழம்பிய நிலையில் மிகுந்த ஆர்வத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு கசிந்த தகவலின் படி, இது விஜய்யின் அடுத்த பட தகவலாக இருக்கும் என்று தெரிகிறது. இயக்குநர் ஷங்கர், விஜய் இணையும் ”முதல்வன் 2” படம் பற்றிய தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. அந்தப் படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கலாம் எனத் தெரிகிறது. ”முதல்வன்” படம் அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்.

அப்போதைய அரசியல் சூழ்நிலையில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இப்படம், முதலில் ரஜினி நடிப்பதாக இருந்தது. ஆனால் பல அரசியல் காரணங்களுக்காக ரஜினி அப்படத்தில் நடிக்கவில்லை. ஆனாலும் படம் பம்பர் ஹிட் ஆனது. ஷங்கர் தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணிகளில் இறங்கியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க உருவாக இருந்த ”இந்தியன் 2” பிரச்சனைகளால் துவக்கப்படாமல் உள்ளது.

“24 ம் புலிகேசி” படமும் பிரச்சனையில் இருப்பதால், ஷங்கர் மீது லைகா தயாரிப்பு நிறுவனம் கோபத்தில் உள்ளது. இதனால் ஷங்கர் தன் அடுத்த படத்தை துவக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளார்.

ஷங்கர் விஜய்யை வைத்து ”முதல்வன் 2” இயக்கும் திட்டத்தில் இறங்கினார். லைகா நிறுவனத்துடன் ஷங்கர் பிரச்சனையில் இருப்பதால் ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. எனவே இன்றைய மாலை அறிவிப்பு ”முதல்வன் 2”ஆக இருக்கலாம். இன்றைய அறிவிப்பு ஷங்கரின் ”முதல்வன் 2” வா ? அல்லது ”பிகில்” படம் பற்றியதா? என்பதற்கு மாலை வரை காத்திருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here