மக்களவையில் ‘ஆதார் சட்டத்திருத்த மசோதா’: நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!

0
92

 

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், ‘அதார் சட்டத்திருத்த மசோதா’ நிறைவேற்றப்பட்டது. ஆதார் பயன்பாட்டிற்கான விதிமுறைகளை மீறுவோர்கள் மற்றும் ஆதார் தனியுரிமையை மீறுவோர்களுக்கு கடும் அபராதங்களை விதிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதாவை, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். நேற்று நிறைவேற்றப்பட்ட இந்த ஆதார் சட்டம் 2106-உடன், மக்களவையில் டெலிகிராப் சட்டம்-1885, பணமோசடி தடுப்பு சட்டம்-2002 ஆகிய சட்டங்களும் நிரைவேற்றப்பட்டது.

இந்த ‘ஆதார் சட்டத்திருத்த மசோதா’ குடிமக்களை மையப்படுத்தி அவர்கள் நலனுக்காகவே நிறைவேற்றப்பட்டது என்கிறார் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத். அப்படி மக்கள நலனுக்காக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் என்ன சொல்கிறது, கவனிக்கப்பட வேண்டிய சில தகவல்கள்!

1. நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படாத வரை ஆதார் எந்த இடத்திலும் கட்டாயமாக்கப்படாது. எந்த ஒரு தனிமனிதரும், எந்த இடத்திலும் ஆதார் எண்ணை கட்டாயமாக அளிக்க வேண்டும் என வற்புறுத்தப்பட மாட்டார்கள். அடையாளத்தை உறுதி செய்துகொள்வதற்காக எந்த இடத்திலும் ஆதார் எண் உறுதியாக அளிக்கப்பட வேண்டும் என கட்டாயப்படுத்தப்படாது.

2. மக்கள் வங்கிகளில் கணக்கை துவங்கிக்கொள்ள ஆதார் எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம். KYC சான்றிதழ்கள் பட்டியலில் ஆதார் கார்டும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி தன்னார்வ அடிப்படையில் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்க ஆதார் எண்ணை பயன்படுத்திக்கொள்ளலாம். பாஸ்போர்ட், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இந்த KYC சான்றிதழ்கள் பட்டியலில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

3. இந்த சட்டத்தின் மூலம் ஒரு ஆதார் கார்டை சமந்தப்பட்ட நபர், எந்த வடிவிலும் ஒரு அடையாள சான்றாக பயன்படுத்திக்கொள்ளலாம். அந்த ஆதார் கார்டாக இருந்தாலும் சரி, புகைப்படமாக இருந்தலும் சரி, அதை அடையாள சான்றாக பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், தனது ஆதார் எண்ணை பாதுகாத்துக்கொள்ள ஒருவர், அந்த எண்ணிற்கான மாற்று மெய்நிகர் அடையாளத்தை அடையாள சான்றாக பயன்படுத்திக் கொள்ளலாம். 

4. 18 வயதை கடந்தவர்கள் தவிர்த்து குழந்தைகளும் இந்த ஆதார் சேவையில் பதிவு செய்யப்பட்டிருப்பார்கள். ஒருவேளை அவர்களுக்கு ஆதார் தேவையில்லையென விருப்பினால், அவர்கள் 18 வயது அடையும்போது, தனது ஆதார் அடையாளத்தை நீக்கிக்கொள்ளலாம்.

5. இந்த சட்டத்தின் மூலம் தகவல் திருட்டை தடுக்கவும், ஆதார் தகவல் பாதுகாப்பை உறுதி செய்யவும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

ரவி சங்கர் பிரசாத் இது குறித்து கூறுகையில், இந்தியா முழுவதும் 123 கோடி மக்கள் ஆதாரில் பதிவு  செய்துள்ளனர். அவர்களில் 70 கோடி மக்கள் தங்கள் மொபைல் எண்களுடன் தங்கள் ஆதார் எண்களை இணைத்துள்ளனர். அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாளும் 2.5 கோடி மக்கள், அடையாளத்திற்காக ஆதார் எண்களை பயன்படுத்துகிறார்கள் என கூறியுள்ளார்.

இந்த மசோதா குறித்து, பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். கடும் விவாதத்திற்கு பிறகு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவிற்கு, காங்கிரஸ், திரினாமூல் காங்கிரஸ் உட்பட சில எதிர் கட்சிகள் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here