PUBG lite வெர்சன் இப்போது இந்தியாவிற்கும் வந்துவிட்டது… அதனை இங்கே டவுன்லோட் செய்யுங்கள்…

0
59

தற்போது உலகில் இருக்கும் ஆண் மற்றும் பெண் பெரும்பாலானோர் முழ்கி கிடக்கும் கேமின் பெயர் தான் PUBG அந்த கேமிற்கு பலரும் அடிமையாகி இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு இது தான் பொழுதுபோக்கு.

மொபைல் போனில் இந்த கேமை விளையாடுவதற்கு சற்று விலையுர்ந்த அல்லது அதிக செயற்திறன் அதாவது RAM கொண்ட மொபைல்கள் தான் தேவைப்படுகிறது. ஆனால் இது செலவை அதிகரிக்கும்.

இதற்காக பெற்றோரிடம் விலையுயர்ந்த மொபைல் போன்களை வாங்கித்தர கூறி பிள்ளைகள் அனைவரும் சண்டையிடுவர். ஆனாலும் சிலர் அதனை கம்ப்யூட்டர் அல்லது மடிக்கணினியில் வைத்து விளையாடுவர்.                  ஆனால் அதிலும் அதிக இடம் மற்றும் அதிகமான செயற்திறன் கொண்ட கம்ப்யூட்டர்களும் தேவைப்படுகிறது என்பதால் அதிலும் மிகவும் அதிகமான செலவுகள் ஏற்பட்டு வந்தது.

தற்போது அதனை குறைப்பதற்காக அந்த கேம் கம்பெனி அந்த கேமை கம்ப்யூட்டர்களுக்கு எளிதாகவும், மிகுந்த இடம் பிடிக்காமலும், குறைந்த செலவிலும் கொண்டுவர திட்டமிட்டு அதனை நிறைவேற்றியுள்ளனர்.

அதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் PUBG lite வெர்சன் என்ற புதிய அப்ளிகேஷன். இதனை பயன்படுத்தி அனைவரும் PUBG கேமை மிகவும் எளிதாகவும், குறைந்த செலவிலும் விளையாடலாம்.

இந்த புதிய அப்ளிகேஷனில் இருக்கும் சிறப்பம்சம் மற்றும் முழுவிவரங்களை தெரிந்து கொண்டு அதனை உங்கள் கம்ப்யூட்டர்களுக்கு டவுன்லோட் செய்தும் கொள்ளலாம்.

PUBG lite பயன்படுத்துவதற்கு குறைந்தது 4GB RAM முதல் 8GB RAM மட்டுமே போதுமானது. இதற்கு விண்டோஸ் 7,8, 10, 64bit கொண்ட மென்பொருள் மட்டுமே தேவைப்படுகிறது.

இதற்கு core i3 2.4GHz முதல் core i5 2.8GHz மட்டுமே போதுமானது. இந்த அனைத்தும் இருந்தால் மட்டுமே இதற்கு போதுமானது என்பதால் அனைவரும் இந்த கேமை எளிதாக பயன்படுத்திகொள்ளலாம்.

மேலும் இந்த கேமால் பல வினோதங்கள் நடைபெறுகிறது. அதனை தவிர்ப்பதற்காக அனைவரும் சிறிது நேரம் மட்டும் இந்த கேமினை பயன்படுத்தி பொழுது போக்கிக்கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

           இதனை டவுன்லோட் செய்வதற்கு இங்கே கிளிக் செய்யவும் PUBG lite download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here