பல தடைகளை வென்ற களவாணி 2; இன்று ரிலீஸ் ஆகியது…

0
128
தடையை வென்ற களவாணி 2; இன்று ரிலீஸ்
களவாணி 2 படத்திற்கு சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் தடையை வென்று களவாணி 2 படம் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2010ல் விமல், ஓவியா நடிப்பில் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் வெளிவந்த வெற்றி பெற்ற படம் களவாணி. இப்படம் ஓவியாவின் அறிமுகப்படமாக அமைந்தது. விமலுக்கு ஒரு திருப்புமுனைப் படமாகவும் அமைந்தது. ஓவியா பிக் பாஸில் புகழ் பெற்ற பிறகு தற்போது களவாணி 2 படத்தில் அதே நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பாகத்தின் கதைக் களத்தை மட்டும் மையமாக கொண்டு கதைத் தொடர்ச்சி இல்லாமல் முற்றிலும் புதிய படமாக இப்படம் உருவாகிள்ளது.

இப்படத்தில் விமல், ஓவியா, சரண்யா பொண்வண்ணன், ரோபோ சங்கர் உள்ளிட்டோா் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனா். படம் இன்று (வெள்ளிக் கிழமை) திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தை வெளியிட சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்தது.

களவாணி 2 படத்தை தயாரிக்க ஒப்பந்தப்படி இயக்குனர் சற்குணம் தன்னிடம் வாங்கிய 67 லட்சம் ரூபாயை வட்டியுடன் திருப்பித் தரவில்லை என்றும், பணத்தை திருப்பி தரும்வரை படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க கோரி படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.

அடுத்த வாரம் புதன் கிழமைக்குள் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் சற்குணம் இவ்வழக்கில் தகுந்த பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.அதுவரை படத்தை வெளியிட தடையும் விதிக்கப்பட்டது. படத்தை வெளியிடுவதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்றிருந்த நிலையில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் படக்குழு மிகுந்த அதிா்ச்சி அடைந்தது. கடந்த இரண்டு நாட்களாக தயாரிப்பாளர் ஜெயக்குமாருடன் படக்குழு பேச்சுவார்ததையில் ஈடுபட்டது.

இதில் சற்குணத்திற்கும், ஜெயக்குமாருக்கும் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் தடை நீக்கப்பட்டது. களவாணி 2 திரைப்படம் அறிவித்தபடி இன்று முதல் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here