இரு சமூகத்தை சேர்ந்த காதலர்கள் திருமணம்…. விளாத்திகுளத்தில் ஆணவப்படுகொலையால் பரபரப்பு….

0
160

உலகம் உயர உயர சென்றாலும் சில இடங்களில் இன்னும் மூடநம்பிக்கைகள் மற்றும் சாதி, மத, மற்றும் இன வேற்பாடுகள் மறையாமல் இருப்பது வருத்தம் அளிக்கும் ஒரு செய்தியாக இருக்கிறது.

அதிலும் ஆணவப்படுகொலை என்பது மிகவும் மோசமானது மற்றும் தண்டனைக்குரியது. அது தமிழகத்தில் பல இடங்களிலும் நடைபெற்று வருகிறது. இதனை தடுத்து நிறுத்த முடியவில்லை.

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் விளாத்திகுளம் பகுதியில் இரு சமூகத்தினை சேர்ந்த காதலர்கள் திருமணம் செய்து கொண்டதால் அந்த பெண்ணின் குடும்பத்தினர் அவர்களை ஆணவப்படுகொலை செய்துள்ளனர்.              தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த காதல் ஜோடி சோலைராஜாவுக்கு வயசு 24, ஜோதிக்கு வயசு 21.

சோலைராஜா வைப்பாறு பகுதியில் உள்ள உப்பளத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது தான் பக்கத்து ஊரான பல்லாகுளம் பகுதியை சேர்ந்த ஜோதி என்ற பேச்சியம்மாளை காதலித்துள்ளார்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

தங்களுக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிந்து குளத்தூர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். அப்போது இரு தரப்பு குடும்பத்தினரும் போலீசார் சொல்வது போல் தொந்தரவு கொடுக்க மாட்டோம் என்று கூறிவிட்டு சென்றனர்.

இருவருமே திருமணத்திற்கு பின்பு பெரியார்நகரில் தனியாக வசித்து வந்தனர். ஜோதி கர்ப்பமாகி உள்ளார். செக்-அப்புக்காக குளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கும் சென்று வந்தார். இது அந்த பெண்ணின் வீட்டிற்கு தெரிந்துவிட்டது.

நேற்று முன்தினம் இரவில் எப்பொழுதும் போல தங்களது வீட்டின் வளாகத்தில் பாயை விரித்து தூகியுள்ளனர். அந்த நேரத்தில் இரும்பு வேலியை தாண்டி குதித்து விடியகாலை 3 மணிக்கு மர்மநபர்கள் நுழைந்துள்ளனர்.

அவர்கள் தூங்கி கொண்டிருந்த 2 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பக்கத்து வீட்டார்கள் வந்து பார்த்தபோது இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இந்த தகவல் அறிந்து குளத்தூர் போலீசாரும் வந்தனர்.இந்த கொலை சம்பவத்தால் விளாத்திகுளமே பரபரப்பானது.

இந்த நேரத்தில் ஜோதியின் அப்பா அழகரை காணவில்லை. அவர் கோவில்பட்டி அடுத்த நாலாட்டின்புத்தூரில் பதுங்கி இருந்தார். அவரிடம் விசாரித்த பொது அவர் தான் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

தூத்துக்குடியில் இந்த ஆணவப்படுகொலை நடந்துள்ளதால் தூத்துகுடியே தற்போது பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. அந்த கிரமாத்தில் தற்போது போலீஸ் பாதுகாப்பு அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here