அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து உலககோப்பையை விட்டு வெளியேறியது ஆப்கானிஸ்தான் அணி…..

0
35

உலககோப்பை தொடரில் இந்த வருடம் ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகவும் மோசமான தொடர் தான். ஏனென்றால் அந்த அணி இந்த வருடம் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் வெளியே சென்றுள்ளனர்.

அதேநேரத்தில் வெஸ்ட்இண்டீஸ் மட்டும் தென்ஆப்ரிக்க அணிகள் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர். அவர்களுக்கும் இந்த வருடம் சற்று மோசமான வருடமாகத்தான் இருக்கிறது.

நேற்று நடைபெற்ற போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது இந்த போட்டி மிகவும் முக்கியமற்ற போட்டி என்று அனைவருக்குமே தெரியும்.                ஆனாலும் இந்த போட்டி சற்று விறுவிறுப்பாகத்தான் சென்றது. இந்த போட்டியில் டாசை வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. வெஸ்ட்இண்டீசின் முதல் விக்கெட் கெய்ல் விரைவாக அவுட் ஆனார்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. உலகக்கோப்பை தொடரில் இதுவரை செய்த தவறுகளை திருத்திக் கொண்டு ஆடியது அந்த அணி. ஆனால் அதில் எந்த ஒரு பயனும் இல்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் லீவிஸ் 58, ஷாய் ஹோப் 77, ஹெட்மயர் 39, பூரன் 58, ஹோல்டர் 45 ரன்கள் சேர்த்து 50 ஓவர்கள் முடிவில் 311 ரன்கள் எடுத்து அசத்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இந்த சவாலான இலக்கை நோக்கி சேஸிங் செய்தது ஆப்கானிஸ்தான். அந்த அணிக்கு குல்பதின் நயிப் 5 ரன்களில் ஆட்டமிழந்து மோசமான துவக்கம் அளித்தார். இது அவர்களை மிகவும் பாதித்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் ரஹ்மத் ஷா 62, இக்ரம் 86, நஜிபுல்லா 31, அஸ்கார் ஆப்கன் 40 ரன்கள் என ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஆனாலும் இறுதி பவர் ப்ளேவில் ஒவ்வொருவராக விக்கெட்டை விட்டனர்.

அதனால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 288 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது ஆப்கானிஸ்தான். ஆனால் இது இருவருக்குமே பயனளிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here