அசத்தலான செட்டிநாடு ஸ்பெஷல் பன்னீர் மசாலா!

0
176

செட்டிநாட்டு உணவென்று சொன்னாலே, உணவு விரும்பிகளுக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்தளவுக்கு இந்தியாவின் எந்த நகரத்துக்கு சென்றாலும், அங்கு செட்டிநாடு உணவகங்கள் இருப்பதை நாம் பாக்கலாம். செட்டிநாடு உணவின் ஸ்பெஷலே அதில் சேர்க்கப்படும் மசாலாக்கள் தான். அந்தவகையில் சுவையான செட்டிநாடு பன்னீர் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்

தேவையானவை:

பன்னீர் – 250 கிராம், அரைத்த தக்காளி – 1, அரைத்த வெங்காயம் – 1, உளுத்தம்பருப்பு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், கிராம்பு – 2, பட்டை – சிறிய துண்டு, பிரியாணி இலை – ஒன்று, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

அரைப்பதற்கு: காய்ந்த மிளகாய் – 4, மிளகு – 10, சீரகம் – 1 டீஸ்பூன், முந்திரி – 10, கசகசா – ஒரு டீஸ்பூன், இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 6 பல், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

  • பன்னீரை நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். (அம்மியில் அரைத்தால் இன்னும் கூடுதல் சுவையுடன் இருக்கும்)
  • வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் உளுத்தம்பருப்பு, வெந்தயம், கிராம்பு, பட்டை, பிரியாணி இலை, கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • இதனுடன் அரைத்த வெங்காயம், தக்காளி சேர்த்து சுண்டி வரும் வரை வதக்கவும்.
  • பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட்டு, உப்பு சேர்க்கவும்.
  • பின்னர் நறுக்கிய பன்னீர் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
  • கிரேவி நன்றாக வெந்ததும், கொத்தமல்லி தூவி இறக்கவும்..
  •   சுவையான பன்னீர் செட்டிநாடு தயார்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here