நியூஸ்லாந்து அணியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து அணி… கடினமான போட்டி தான்…

0
145

உலககோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருவதால் இந்த முறை இங்கிலாந்து அணி சற்று சிறப்பாகவே விளையாடுகின்றனர். அவர்கள் ஒரு வழியாக அரைஇறுதிக்குள் நுழைந்துவிட்டனர்.

நேற்று நடைபெற்ற போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக அமைந்தது. ஏனென்றால் அந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தனர்.

நியூஸ்லாந்திற்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்து, பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியுடன் வெற்றி பெற்றிருந்தால் இங்கிலாந்து அணி வெளியே சென்றிருக்கும்.                நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி டாசை வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியினர் ஆரம்பித்தேலேயே இங்கிலாந்து அணியினர் ஒரு வெற்றி பெரும் முனைப்பில் களம் இறங்கினர்.

இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ அபார துவக்கம் அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு 123 ரன்கள் சேர்த்தனர். ராய் 60, பேர்ஸ்டோ 106 ரன்கள் எடுத்தனர் அசத்தினர்.

இறுதியில் சற்று தடுமாறி ரன் குவித்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் ஆரம்பிக்கும் போது 350 ரன்கள் எடுப்பதாக தெரிந்தது.

ஆனால் நியூஸ்லாந்து பௌலர்கள் அதனை தடுத்துவிட்டனர். இருந்தாலும் 305 ரன்கள் என்பது சற்று கடினமான இலக்கு தான். நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் இருவருமே சிறப்பாக விளையாடவில்லை.

நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஹென்றி நிக்கோல்ஸ் 0, மார்டின் குப்டில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அதேநேரத்தில் நியூஸ்லாந்து அணிக்கு நேற்று கொஞ்சம் லக்கும் குறைவாகத்தான் இருந்தது.

ஏனென்றால் வில்லியம்சன், ராஸ் டெய்லர் அடித்த பந்து ஸ்டம்பில் பட்டு ரன் அவுட் ஆனார். ராஸ் டெய்லரும் ரன் அவுட் ஆனார். அதன் பின் டாம் லாதம் தவிர அனைத்து வீரர்களும் சரியாக விளையாடவில்லை.

இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 186 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இங்கிலாந்து 119 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

1992க்குப் பின் இங்கிலாந்து அணி முதல் முறையாக உலகக்கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியதும், 1983க்குப் பின் நியூசிலாந்து அணியை உலகக்கோப்பை தொடரில் வீழ்த்தியதும் நேற்று தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here