சென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி… மழை வெளுத்து வாங்கப்போகுதாம்… நடந்தால் சந்தோசம் தான்…

0
176

தமிழகத்தில் இருக்கும் பிரச்சனைகளில் மிகவும் முக்கியமான பிரச்சனை தண்ணீர் பிரச்சனை தான். அதனை தீர்ப்பதற்கு தான் யாராலையும் ஒரு வழியை தேட முடியவில்லை. ஆனால் இப்போ ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.

தண்ணீர் பிரச்சனையை தீர்க்குமா இரு தெரியவில்லை ஆனால் நிச்சயம் மழை பெய்யும் என்று ஒரு அறிவிப்பு வந்துள்ளது. காய்ந்து இருக்கும் அந்த ஊருக்கு மழை பெய்வது என்பது மிகவும் அவசியம் தான்.

சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் லேசாக மழை பெய்தது.                     தமிழகத்தின் பல இடங்களிலும் நிலத்தடி நீர் மிகவும் அடியில் சென்று விட்டது. அதனால் தண்ணீருக்காக மக்கள் திண்டாடி வருவது தொடர்ந்து அனைத்து இடங்களிலும் நிகழ்ந்து வருகிறது.

இன்று தமிழகத்தின் வெதர்மென் பிரதீப் ஜான் பேஸ் புக்கில் இதனை தெரிவித்துள்ளார். இமயமலையில் ஏற்பட்ட தடுப்பு காரணமாக வரும் 9ஆம் தேதி முதல் பருவமழையில் இடைவேளை ஏற்படும் என்று கூறியுள்ளார்.

ஆனால் பருவமழை இடைவேளை விடுவதால் தமிழக கடலோர மற்றும் உள் மாவட்டங்களுக்கும் சென்னைக்கும் வெப்பசலனத்தை ஏற்படுத்தி மழையை ஓரளவு கொடுக்கும் என்பது மகிழத்தக்கது.

ஜூலை 9-ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் சென்னையில் கனமழை பெய்யும். உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், டார்ஜிலிங் ஆகிய இடங்களில் அடுத்த வாரம் மிக கனமழை பெய்யும் என்றும் கூறினார்.

அடுத்த 3 நாட்களுக்கு கர்நாடகத்தின் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புள்ளது என்ற நல்ல செய்தியையும் கூறியுள்ளார். இது மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது.

மழை பெய்யாமல் வறண்டு இருக்கும் தமிழகத்திற்கு சற்று தூரல் விழுந்தாலும் ஆனந்தமாகத்தான் இருக்கும். மழை பெய்தால் தான் மக்களுக்கு மீண்டும் ஒரு சிறந்த நாளாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here