சுவையான கேரமல் கஸ்டர்ட்…

0
9

தேவையானவை

பால் – 125 மில்லி
முட்டை – 1
சர்க்கரை – 60 கிராம்
ஜாதிக்காய் – தேவையான அளவு
வெண்ணிலா சாரம் – 5 மில்லி

செய்முறை

  • முதலில் பாலை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • அதில் 40 கிராம் சர்க்கரையை சேர்த்து கிளறவும். பின்னர் ஆற விடவும்.
  • இத்துடன் முட்டை, ஜாதிக்காய், வெண்ணிலா சாரம் மூன்றையும் நன்கு கலக்கி ஆறிய பாலுடன் சேர்க்க வேண்டும்.
  • மீதமுள்ள 20 கிராம் சர்க்கரையை வாணலியில் போட்டு மிதமான சூட்டில் உருக்க வேண்டும். அது உருகும்போது ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்க்கவேண்டும்.
  • அதன் நிறம் காபி கலராக மாறும். அதனை பாத்திரத்தில் ஊற்றவும்.
  • 2 நிமிடம் கழித்து ஆறிய பால் கலவையை அதன் மேல் ஊற்றி, பிளாஸ்டிக் பேப்பரால் மூடவும்.
  • பின்னர் இட்லி பானையில் இதனை போட்டு 20 – 25 நிமிடம் வேக விடவும். வெந்ததும் வெளியே எடுத்து பிளாஸ்டிக் பேப்பரை அகற்றவும்.
  • சூடு ஆறிய பிறகு பிரிட்ஜில் 2 மணிநேரம் வைக்க வேண்டும்.
  • அப்புறம் எடுத்து சாப்பிட்டு பாருங்க… சுவையான கேரமல் கஸ்டர்ட் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here