மற்றுமொரு இந்திய கிரிக்கெட் வீரர் தனது ஓய்வை அறிவித்தார்…. அவர் CSK செல்லகுட்டி அம்பத்தி ராயுடு….

0
88

இந்த வருடம் முழுவதும் இந்தியர்கள் கிரிக்கெட்டிலேயே மூழ்கி இருந்தனர். அதற்கு காரணம் ஐ.பி.எல். மற்றும் அதனை தொடர்ந்து உலககோப்பை போட்டி நடைபெற்று வருவது தான்.

இப்படி நன்றாக சென்றுகொண்டிருந்த வேளையில் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் திடீரென தனது ஓய்வினை அறிவித்தார். அவரை அனைவரும் அதிகமாகவே மிஸ் செய்தனர்.

இந்த நேரத்தலில் தற்போது மற்றொரு இந்திய கிரிக்கெட் வீரரும் தனது ஓய்வினை அறிவித்துள்ளார். இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சற்று வருத்தம் காணப்படுகிறது.               அம்பதி ராயுடு இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரர். அவர் நேற்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்து உள்ளார். இது தான் தற்போதுள்ள சர்ச்சை.

எப்போதுமே இந்திய அணியில் 4வது பேட்ஸ்மேனாக யார் களமிறங்குவது என்பதுதான் பிரச்சனையாக இருக்கிறது. இதுதான் இந்திய அணிக்குள் நிறைய சர்ச்சைகளை தினமும் ஏற்படுத்தி வருகிறது.

இந்திய அணியில் நான்காவது வீரராக கே எல் ராகுல், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், மனிஷ் பாண்டே, விஜய் சங்கர் உள்ளிட்ட பலர் வீரர்கள் களமிறங்கி இருக்கிறார்கள்.

உலகக் கோப்பை தொடரில் 4வது இடத்தில் ஆட தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். அப்போதே அம்பதி ராயுடுவுக்கு இனி வாய்ப்பு கிடைக்காது என்று தெரிந்துவிட்டது போல.

இரண்டு நாட்களுக்கு முன்பு காயம் காரணமாக விஜய் சங்கர் இந்திய அணியில் இருந்து விலகினார். அப்போதும் கூட இந்திய அணியில் ரிஷப் பண்டை தான் சேர்த்து கொண்டனர்.

விஜய் ஷங்கருக்கு மாற்று வீரராக இளம் வீரர் மயங்க் அகர்வால் கொண்டுவரப்பட்டார். இரண்டு முறையும் அம்பத்தி ராயுடுவின் நியாபகமே அவர்களுக்கு வரவில்லை என்பது தான் ராயுடுவின் கோபம்.

அவர் தற்போது ஐபிஎல் போட்டி, சர்வதேச போட்டி, என அனைத்து விதமான கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். அவர் அணியில் தேர்ந்தேடுக்கப்படாததே இந்த ஓய்விற்கு காரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here