மண மணக்கும் கொத்துக்கறி உருண்டை குழம்பு

0
148

தேவையானவை:

கொத்துக்கறி    – 1/2 கிலோ
தேங்காய்    – 1 கப்
மல்லித்தழை, புதினா –  சிறிதளவு
முட்டை   – 1
மல்லித்தழை, புதினா   – சிறிதளவு
நெய்   – 2 ஸ்பூன்
கசகசா   – 1 ஸ்பூன்
பல்லாரி   – 1
மிளகாய்   – 6
வர கொத்தமல்லி  – 2 ஸ்பூன்
பெருஞ்சீரகம்  – 1 ஸ்பூன்
பட்டை    – 1 அங்குலம்
கிராம்பு   – 3
எலுமிச்சம்பழம் ஜூஸ்  – 1/2 ஸ்பூன்
முந்திரிப்பருப்பு   – 6
ஏலக்காய்   – 2

செய்முறை:

  • முதலில் மிளகாய் வற்றல், வர கொத்தமல்லி, பெருஞ்சீரகம், கசகசா, முந்திரிபருப்பு ஆகியவற்றை இளம் சிவப்பாக வறுத்து மசாலாவாக அரைக்கவும்.
  • குக்கரில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கொத்துக்கறியை தண்ணீரில்லாமல் போட்டு வதக்கவும்.
  • வதக்கிய கறியை மிக்ஸியில் லேசாக அடித்துக் கொள்ளவும்.
  • இத்துடன் அரைத்த மசாலாவில் பாதியை சேர்த்து, முட்டையையும் உடைத்து ஊற்றி நன்றாக கலந்து சிறு சிறு உருண்டையாக பிடித்துக் கொள்ளவும்.
  • பின் அதே குக்கரில் 2 ஸ்பூன் நெய், 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு, மல்லித்தழை, புதினா, பொடியாக நறுக்கிய பல்லாரியை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தொடர்ந்து மீதமுள்ள அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கவும். இத்துடன் தேங்காய்ப்பாலை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
  • குழம்பு கொதிக்கும்போது உருண்டைகளை ஒவ்வொன்றாக போட்டு, எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விடவும்.
  • இறக்கியவுடன் எலுமிச்சம்பழம் ஜூஸை ஊற்றவும்.
  • மணம் நிறைந்த கொத்துக்கறி உருண்டை குழம்பு ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here