அரையிறுதிக்குள் நுழைந்தது இந்திய அணி…. வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 2ஆம் இடத்திற்கு முன்னேற்றம்….

0
169

2019 உலககோப்பை எப்பொழுதும் போல இல்லாமல் ஐ.சி.சி. தரவரிசையில் முதல் பத்து இடங்களை பிடித்துள்ள நாடுகளை மற்றும் தேர்ந்தெடுத்து உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வருடம் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூஸ்லாந்து, ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், மற்றும் தென்ஆப்பரிக்க அணிகள் மட்டுமே விளையாடுகின்றன.

இந்த போட்டியில் தற்போது ஆஸ்திரேலிய அணி மற்றும் இந்திய அணியும் அரைஇறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டனர். மீதமுள்ள இரண்டு இடத்திற்கு தான் கடுமையான போட்டி நிலவுகிறது.                  நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின இந்த போட்டியில் இந்திய அணி டாசை வென்று பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கினர்.

இந்திய அணியின் துவக்க வீரர் கே.எல்.ராகுல் நிதானமாக துவங்கினார். இந்த போட்டியில் துவக்க வீரர் ரோஹித் ஷர்மா 9 ரன்கள் அடித்த நிலையில் ஒரு கேட்சை கொடுத்து அவுட் ஆக பார்த்தார்.

ஆனால் அந்த கேட்சை வங்கதேச வீரர் தமீம் இக்பால் தவறவிட்டார். அதன் பிறகு அதிரடி காட்டினர் ரோஹித் ஷர்மா. அங்கிருந்து துவங்கிய ரோஹித் ஷர்மா 104 ரன்களில் தான் தனது விக்கெட்டை விட்டார்.

இந்திய அணியின் முதல் விக்கெட் 180 ரன்களில் தான் விழுந்தது. இந்திய அணி வேகமாக ஆரம்பித்து இறுதியில் சற்று தடுமாறி 50 ஓவர்கள் முடிவில் 314 ரன்கள் எடுத்து 9 விக்கெட் இழந்திருந்தனர்.

பங்களாதேஷ் அணியினர் 315 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கினர். பங்களாதேஷ் அணியினர் துவக்கம் சற்று மெதுவாக இருந்தது என்று தான் கூறவேண்டும்.

இந்திய அணியின் பௌலர் முஹம்மது ஷமி முதல் விக்கெட்டை எடுத்து கொண்டுத்தார். ஆனால் அதன் பிறகு சாமி விசிய அனைத்து ஓவர்கலுமே இந்திய அணிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தது.

                   வங்கதேசம் 48 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 286 ரன்களை மட்டுமே எடுத்தது. 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா, அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்திய அணியின் பெஸ்ட் பௌலர் அல்லது வேர்ல்ட் நம்பர் ஒன் பௌலர் பும்ரா 4 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்தார். இந்திய அணியின் ஹர்டிக் பாண்டியா நேற்று டக் அவுட்ஆனார்.

                     ஆனால் அவர் தான் பேட்டிங்கில் ரன்கள் எடுக்காவிட்டாலும் பெளலிங்கில் பங்களாதேஷ் அணியின் மூன்று முக்கியமான விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here